Asianet News TamilAsianet News Tamil

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டக்கூடாது ஏன் தெரியுமா? நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!

வாரத்தில் உள்ள 7 நாட்களில் வெள்ளி, செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும் கடவுளுக்கு மிகவும் உகந்த நாட்களாக பார்க்கப்படுகிறது. அந்த நாட்களில் முடியோ அல்லது நகமோ வெட்டினால் துரதிஷ்டம் வந்து விடும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். 

dont cut nail on Tuesday, friday
Author
First Published Jul 27, 2023, 2:39 PM IST | Last Updated Jul 27, 2023, 2:42 PM IST

வாரத்தில் உள்ள 7 நாட்களில் வெள்ளி, செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும் கடவுளுக்கு மிகவும் உகந்த நாட்களாக பார்க்கப்படுகிறது. அந்த நாட்களில் முடியோ அல்லது நகமோ வெட்டினால் துரதிஷ்டம் வந்து விடும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். 

நம் முன்னோர்கள் பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்து இருந்துள்ளனர். ஆனால் இன்றைய கால கட்டத்தில் இப்போதுள்ள இளம் தலைமுறையினர் அதைப் பற்றி சிந்திப்பது கூட கிடையாது. காரணம் மாறிவரும் கலாசாரம், காலநிலைக்கு ஏற்ப நம் மனதும் மாறி வருவதே காரணம். இதுகுறித்து அட்வைஸ் செய்தால் இப்போது இருக்கும் தலைமுறையினருக்கு நம் மீது கோபம் தான் வருகிறது. 

இதையும் படிங்க;- ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதத்தில் இத்தனை விசேஷங்களா? இதோ முழு விபரம்..!

இந்நிலையில், எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும், செவ்வாக்கிழமை, வெள்ளிக்கிழமை நகம் வெட்ட கூடாது என நம் முன்னோர்கள் தெரிவித்து இருப்பார்கள் அல்லவா? அதற்கு காரணம் என்ன தெரியுமா? பெருமாளுக்கு மிகவும் உகந்த நாள் சனிக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த நாள். மகாலட்சுமி என்றால் தனவரவு என்று பொருள்படும் அதாவது பொன்னும் பொருளும் சேரக்கூடிய நாள் வெள்ளிக்கிழமை. ஆனால் அந்த நாளில் எதையும் இழக்க கூடாது என்பது ஐதீகம். இதை கருத்தில் கொண்டே வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டக்கூடாது என்று சொல்வதுண்டு. 

இதையும் படிங்க;-  திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது மழை வந்தால் ஒதுங்கக் கூடாது தெரியுமா? புராணம் கூறுவது என்ன?

முடி, நகம் இரண்டுமே வெட்ட வெட்ட வளர்வது தானே? அதில் இழக்க என்ன இருக்கிறது ?என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அதுவும் நம் உடலில் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது. இதனால் வெள்ளிக்கிழமை நம் உடலில் உள்ள இந்த அங்கத்தை இழக்கக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு நம்பிக்கையின் அடிப்படையில் நம் முன்னோர்களால்  சொல்லப்பட்டு வருகிறது. அதேபோல செவ்வாய், வெள்ளிகிழமைகளில் கடன் கொடுக்கக்கூடாது என்று சொல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios