திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது மழை வந்தால் ஒதுங்கக் கூடாது தெரியுமா? புராணம் கூறுவது என்ன?
திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது திடீரென்று மழை வந்தால் மழைக்கு ஒதுங்கக்கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா? அதற்கு புராணம் கூறும் கதை இதோ..
சாகா வரம் பெற்ற இரணியன், மேலும் வரம் பெறுவதற்காக மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான். கணவனின் தவம் புரியும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக மனைவி லீலாவதி
ஒவ்வொரு புனிதத்தலமாகத் சென்றாள். அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி ஆவாள். அவளது நிலையை அறிந்த நாரதர், "திருவண்ணாமலை திருத்தலம் சென்று காயத்ரி மந்திரம் சொல்லியபடி, கிரிவலம் வந்தால் உனக்கு நல்வழி கிட்டும்!' என்று கூறி, அவளுக்கு காயத்ரிமந்திரத்தை சென்னார்.
அதன்படி லீலாவதி, திருவண்ணாமலையில் காயத்ரிமந்திரம் சொல்லியபடி கிரிவலம் வந்தாள். அப்போது திடீரென்று அமுத புஷ்ப மழைபொழியத் தொடங்கியது. பூமாதேவி, பூலோகத்தில் நடக்கும் அக்கிரமச் செயல்கள் அனைத்தையும் மிக்கப் பொறுமையுடன் தாங்குகிறாள். எனவே, பூமாதேவியைச் சாந்தப்படுத்துவதற்காக இப்படி மழை பொழியுமாம். அதுபோல் இந்த மழையானது இறைத்தன்மையுடையது என்பதால், இந்த மழைத்துளிகளுக்குப்பின் அமுதத் துளி ஒன்று கீழே விழும். அந்தத் துளி எங்கு விழுகிறதோ, அங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வர்கள். மேலும் அங்கு விவசாயம் செழித்து வளரும், அமைதி நிலவும். அது மட்டுமின்றி அங்கு "அமுத புஷ்பமூலிகை" என்ற அரிய வகை தாவரமும் தோன்றும்.
இதையும் படிங்க: தக்காளி விலை உயரும்; ஆற்காட்டு பஞ்சாங்கம் முன்பே கணிப்பு..!!
இந்நிலையில், மழைத் துளிகள் கனமாக விழுவதால், பாறை ஒன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள் லீலாவதி. இருந்த போதிலும், காயத்ரி மந்திரத்தை விடாமல் சொல்லிக் கொண்டு இருந்தாள். அப்போது, விழுந்த அமுதத்துளி பாறையில் பட்டதோடு மட்டுமல்லாமல், அதன் அணுவளவு லீலாவதியின் கர்ப்பப் பையையும் அடைந்தது. பின் அதைக் கருவிலிருக்கும் பிரகலாதன் உண்டான். மேலும் அந்தப் பாறையில் அமுத புஷ்ப மூலிகை தோன்றியது.
அப்போது அங்கு கிரிவலம் வந்த சித்தர் பெருமக்கள் இந்த காட்சியைக் கண்டு, உரிய மந்திரம் சொல்லி அந்த மூலிகையைப் பறித்தனர். பின் காயத்ரி மந்திரம் சொல்லி லீலாவதிக்கு ஆசி கூறி கொடுத்தார்கள். மேலும் அவளது வயிற்றில் வளரும் சிசு மூலம் மகாவிஷ்ணு புது அவதாரம் எடுக்க இருப்பதை சித்தர்கள் உணர்ந்தனர்.பின் லீலாதேவி அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள். ஆனால், அந்த மூலிகையின் சக்தி கருவை அடைந்தது. இதுதான் பின்னாளில் ஸ்ரீ நரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்கும் சக்தியை பிரகலாதனுக்கு வழங்கிய கதை ஆகும்.
இதையும் படிங்க: மத வழிபாட்டில் நெல்லிக்காய் மரம் உண்டு தெரியுமா? நெல்லிக்காய் தானம் செய்தால் கிடைக்கும் பலன்கள் இதோ..!!
அதுபோல் மழையும், வெயிலும் சேர்ந்து வரும்போது ஸ்ரீலட்சுமி நரசிம்மர் மந்திரங்களை சொல்லி வணங்கினாள் நமது வீட்டில் செல்வமழை பொழியும் என்பது ஐதீகம். மேலும் மழை பொழியாவிட்டாலும் மந்திரம் சொல்லியபடி, கிரிவலம் வந்தால் நற்பலன்கள் ஏற்படும். குறிப்பாக தகுந்த ஆசானிடன் மந்திர உபதேசம் பெற்றே காயத்ரி மந்திரத்தை சொல்ல வேண்டும் என்பது விதியாகும்.