ஜூலை மாதத்தில் பல கோடி புண்ணியங்கள் தரும் ஆடி மாதம் பிறந்துள்ளது சிறப்பானது என்றால், அடுத்து வரவிருக்கும் ஆகஸ்ட் மாதம் கூடுதல் சிறப்பு பெற்றதாக உள்ளது. 

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. அதிலும் குறிப்பாக ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த வழிபாட்டுக்குரிய மாதமாக கருதப்படுகிறது. அந்த அளவுக்கு இந்த மாதம் முழுவதும் பல விசேஷங்கள் நிறைந்துள்ளன. தமிழ் மாதங்களில் தை முதல் ஆனி வரையிலான மாதம் உத்ராயணகாலம் எனவும் ஆடி முதல் தை மாதம் வரையிலான மாதங்கள் தட்சிணாயன காலம் என பிரிக்கப்பட்டுள்ளது. 

ஜூலை மாதத்தில் பல கோடி புண்ணியங்கள் தரும் ஆடி மாதம் பிறந்துள்ளது சிறப்பானது என்றால், அடுத்து வரவிருக்கும் ஆகஸ்ட் மாதம் கூடுதல் சிறப்பு பெற்றதாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், ஆடி மாதத்தில் வரும் முக்கிய விசேஷகள் அனைத்தும் ஆகஸ்ட் மாதத்தில் தான் வருகிறது. எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பதை தெரிந்து கொள்வோம். 

இதையும் படிங்க;- சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 10 கோவில்கள் இதுதான்..!

* ஆகஸ்ட் 01 (ஆடி 16) செவ்வாய் - பவுர்ணமி, ஆடித்தபசு

* ஆகஸ்ட் 03 (ஆடி 18) வியாழன் - ஆடிப்பெருக்கு

* ஆகஸ்ட் 04 (ஆடி 19) வெள்ளி - சங்கடஹர சதுர்த்தி விரதம்

* ஆகஸ்ட் 09 (ஆடி 24) புதன் - ஆடி கிருத்திகை , கார்த்திகை விரதம்

* ஆகஸ்ட் 13 (ஆடி 28) ஞாயிறு - பிரதோஷம்

* ஆகஸ்ட் 15 (ஆடி 30) செவ்வாய் - சுதந்திர தினம் , 

* ஆகஸ்ட் 15 (ஆடி 31) புதன் ஆடி அமாவாசை

* ஆகஸ்ட் 16 (ஆடி 31) புதன் - ஆடி அமாவாசை

* ஆகஸ்ட் 20 (ஆவணி 03) ஞாயிறு - நாக சதுர்த்தி

* ஆகஸ்ட் 21 (ஆவணி 04) திங்கள் - நாக பஞ்சமி, கருட பஞ்சமி

* ஆகஸ்ட் 25 (ஆவணி 08) வெள்ளி - வரலட்சுமி விரதம்

* ஆகஸ்ட் 29 (ஆவணி 12) செவ்வாய் - ஓணம் பண்டிகை

* ஆகஸ்ட் 30 (ஆவணி 13) புதன் - ஆவணி அவிட்டம்

* ஆகஸ்ட் 31 (ஆவணி 14) வியாழன் - காயத்ரி ஜெபம்

இதையும் படிங்க;- கோவிலில் உடைக்கும் தேங்காய் அழுகினால் அது அபசகுணமா? பூ இருந்தால் என்ன பொருள்?