MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • கோவிலில் உடைக்கும் தேங்காய் அழுகினால் அது அபசகுணமா? பூ இருந்தால் என்ன பொருள்?

கோவிலில் உடைக்கும் தேங்காய் அழுகினால் அது அபசகுணமா? பூ இருந்தால் என்ன பொருள்?

நாம் கோவிலில் உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தாலோ அல்லது அதில் பூவிருந்தாலோ அதற்கு என்ன பொருள் அது அபச குணமா அதற்குரிய பரிகாரம் என்ன என்பதை பார்ப்போம். 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Jul 22 2023, 04:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

வீட்டில் நடக்கும் அத்தனை சுப காரியங்களிலும்  தேங்காய் முக்கியமானது. இன்றும் பலர் இறைவனை நினைத்து செய்யும் நல்ல காரியம் நன்றாக கைகூடுமா என்பதை தேங்காய் உடைவதை வைத்தே  கணித்துவிடுவதும் உண்டு. அதனாலேயே தேங்காயை எல்லோரும் ஒன்று பலமுறை பார்த்து பார்த்து கடையில் வாங்குவோம்.

26

அப்படி இருந்த போதிலும்  தேங்காய் சரியாக உடையவில்லை என்றாலோ அல்லது அழுகி இருந்தாலோ  இறைவனுக்கு ஏதோ குறை வைத்துவிட்டோம் என்று பலரும் கவலைப்படுவார்கள். இது குறித்து பார்ப்பதற்கு முன்பு தேங்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.

36

அழுகிய தேங்காய் 

தேங்காயில் உள்ள தலைப்பகுதியில் மூன்று கண்கள் இருக்கும். அது மனிதனின் மும்மலங்களாகிய ஆணவம் கண்மம் மற்றும் மாயை ஆகியவற்றைக் குறிக்கிறது. இதை கோவிலில் உடைப்பதன் மூலம் என்னுடைய மும்மலங்களையும் உன் முன்னே உடைத்தெறிகிறேன் அர்த்தம். தேங்காயில் இருக்கும் மூன்று கண்களில் முதல் கண் பிரம்மன் என்றும், 2வது கண் லட்சுமி என்றும் மூன்றாவது கண் சிவன் என்பதும் பொதுவான நம்பிக்கையாக உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க தேங்காயை சாமிக்கு உடைக்கும்போது அது அழுகியிருந்தால் அது ஒரு மிகப்பெரிய அபசகுணம் என்று கருதி மக்கள் வருத்தப்படுவது வழக்கம்.

46

ஆனால் உண்மை என்னவென்றால் தெய்வத்திற்கு  உடைக்கப்பட்ட தேங்காய் அழுகியிருந்தால் அது நன்மை தான். இதன் மூலம் தீயசக்தி, பீடை, கண் திருஷ்டி போன்றவை அகன்று போகும் என்று கூறப்படுகிறது.  அதே நேரம் நீங்கள் வீட்டில் அல்லது கோயில் எங்கு தேங்காய் உடைத்தாலும் தேங்காய் அழுகலாக  உடைந்தால் மனம் வருத்தப்படாமல் மீண்டும் தேங்காய் வாங்கி வந்து உடைக்கலாம்.

56

கொப்பரை தேங்காய்

இறைவனுக்கு உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தாலும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் தெய்வத்திற்கு உடைக்கப்படும் தேங்காய் கொப்பரையாக இருந்தால் அந்த வீட்டில் விரைவில்   சுபகாரியம் நடக்கப் போகிறது  என்று அர்த்தம்.

66

​பூ விழுந்த தேங்காய்

தெய்வத்திற்கு உடைக்கப்பட்ட தேங்காயில் பூ இருந்தால் அது ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது. மேலும் இதனால் பண வரவு நல்ல லாபம் எதிர்பாராத நல்ல விஷயங்கள் போன்றவை  நடக்கும் என்பது நம்பிக்கை. இவையெல்லாம் தாண்டி இறைவனை மனம் உருக வேண்டும்  போது  இறைவனை சரணடையும் போது நடக்கும் எந்த ஒரு விஷயமும் அபசகுணம் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள்.  பக்தியோடு பூஜை செய்வதை காட்டிலும் நம்பிக்கையோடு கடவுளை சரணடைவது தான் இறைவனுக்கு பிடித்தமானது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கந்த சஷ்டி 2026: முருகன் அருள் பெற கடைப்பிடிக்க வேண்டிய விரத முறை என்ன?
Recommended image2
எரியும் பிணத்தை உண்ணும் வினோத திருவிழா.! திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் நள்ளிரவில் நடந்த மயானக்கொள்ளை.!
Recommended image3
வீட்டில் இந்த ஓவியம் இருந்தால் செல்வம் பெருகும்.. நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved