- Home
- Astrology
- Rahu Transit 2026: ராகு பார்வை ஆரம்பம்.! 4 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் யோகம்.! உங்க ராசி இருக்கா?
Rahu Transit 2026: ராகு பார்வை ஆரம்பம்.! 4 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் யோகம்.! உங்க ராசி இருக்கா?
Rahu Transit 2026: ராகு பகவான் விரைவில் தனது ராசியை மாற்றி மகர ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இதன் காரணமாக நான்கு ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும் எனக் கூறப்படுகிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Rahu Transit 2026
ஜோதிடத்தில் ராகு பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். ராகு பகவான் மாயைகள், ஆசைகள், எதிர்பாராத திருப்பங்கள், திடீர் மாற்றங்கள் ஆகியவற்றின் காரகராவார். அவர் ராசி மாறு பொழுதெல்லாம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படுகிறது. இந்த நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி காலை 10:32 மணியளவில் அவர் சனி பகவானின் சொந்த வீடான மகரத்திற்குப் பெயர்ச்சிகிறார். இது நான்கு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. அது குறித்து இங்கு விரிவாகக் காணலாம்.
சிம்மம்
ராகுவின் மகர ராசி பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை வழங்க இருக்கிறது. சிம்ம ராசிக்காரர்கள் இதுவரை அனுபவித்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் தீரத் தொடங்கும். உடன் பிறந்தவர்கள், சகோதரர் வழியில் இருந்து ஆதரவு கிடைக்கும். பண விஷயத்தில் இருந்து வந்த சங்கடங்கள் அகலும். தொழிலில் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள். கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் பெரிய லாபத்தை ஈட்டுவீர்கள். தொழில் முதலீடுகள் தொடர்பாக வெளிநாடுகளுக்கு பயணம் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெறுவீர்கள். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.
துலாம்
ராகுவின் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. குறைந்த வருமானத்தில் இருப்பவர்கள் நிறைவான ஊதியத்தில் வேலைக்கு மாறுவீர்கள். உபரி வருமானங்கள் பெருகும். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். நிதி நிலைமை கணிசமாக உயரும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த காலகட்டம் சாதகமாக இருக்கும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து வேலைக்கான அழைப்புகள் வரும். அரசு பணிக்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டி, பொறாமைகள் குறையும். எதிரிகள் விலகுவார்கள். திருமணத்தடை நீங்கி, நல்ல இடத்தில் வரன் அமையும். குழந்தை வரனுக்காக காத்திருப்பவர்கள் மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பீர்கள்.
விருச்சிகம்
ராகுவின் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்க இருக்கின்றது. குடும்பத்தில் இருந்து வந்த தகராறுகள் தீர்க்கப்படும். வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சுப காரியங்கள் நடக்கும். வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். மாணவர்கள் உயர் கல்வியைத் தொடரலாம். சுப காரியங்கள் தள்ளிப் போய்க் கொண்டே வந்தவர்களுக்கு சுப நிகழ்வுகள் நடக்கும். உங்கள் காதல் அடுத்த கட்டமான திருமணத்தை நோக்கி நகரும். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் இருந்து வருமானம் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் கிடைக்கலாம். ஒரு குழுவை தாங்கும் அளவிற்கு தலைமைப் பொறுப்புகளையும் ஏற்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தள்ளி போய்க் கொண்டிருந்த சம்பள உயர்வு கைக்கு கிடைக்கும்.
மகரம்
ராகு பகவான் மகர ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் வர இருக்கிறார். இதன் காரணமாக மகர ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். செல்வம், அதிர்ஷ்டம் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். நீண்ட காலமாக கிடப்பிலிருந்த பணிகளை முடிப்பீர்கள். வருமானம் கணிசமாக உயரும். உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெறுவீர்கள். கடன் தொல்லைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து வேலைக்கான அழைப்புகளைப் பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

