தோப்புக்கரணம் போடுவதன் அறிவியல் உண்மை தெரியுமா?
நமது முன்னோர்களின் ஒவ்வொரு செயலிற்கு பின்பும் ஒரு மிகப்பெரிய அறிவியல் இருப்பதும் நாம் அறிந்த ஒன்றே. அந்த வகையில், நாம் ஏன் கோயில்களில் தோப்புகரணம் போடவேண்டும் என்பதை பற்றியும் அதை ஏன் குறிப்பாக பிள்ளையார் சிலை முன்பு போடுகிறோம் என்பதை பற்றியும், அதன்பின் இருக்கும் அறிவியலை தெரிந்து கொள்வதும் முக்கியமானதாகும்.
தமிழர்களாகிய நாம் சுமார் 200 ஆண்டுகளாக தான் நவீன மருத்துவத்திற்கு மாறியிருக்கிறோம். ஆனால் அதற்கு முன்பாக சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக, நாம் நோய் வராமல் வாழ்வது எப்படி என்கிற வாழ்வியல் முறையை அறிந்து வைத்து அதனடிப்படையில் தான் வாழ்ந்து வந்தோம்.
உதாரணமாக காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு கோயிலிற்கு செல்வதை தமிழன் வழக்கமாக வைத்து இருந்தான். எந்த கோயிலிற்கு சென்றாலும் அங்கு முதலில் இருப்பது பிள்ளையார் தான். அதனால் அவருக்கு முன்பாக சில தோப்புக்கரணங்கள் போட்டுவிட்டு அதன் பிறகு கோவிலில் இருக்கும் மற்ற கடவுள்களை வணங்க செல்வது வழக்கமானதாக பின்பற்றப்பட்டு வந்தது.
ஆனால் இப்போதிருக்கும் இளைய தலைமுறையினர் இதனை பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஆனால் இதனை நாம் புரிந்துகொள்ள விட்டாலும் கூட, இந்த தோப்புக்கரணத்தின் மகிமையை அமெரிக்கர்கள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றனர்.
கோவில்களில் மணி அடிப்பது எதற்காக தெரியுமா?
தோப்புக்கரணத்தின் போது இடதுகையை கொண்டு வலது காதையும், வலது கையை கொண்டு இடது காதையும் பிடித்து உட்கார்ந்து எழுந்திருக்கும் பொழுது முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளில் சக்தி வாய்ந்த மாற்றங்கள் நிகழ்கிறது. இதனால் மூளையின் செல்களும், நியூரான்களும் புத்துணர்ச்சி அடைகின்றன எனக் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் மூளையின் வலது மற்றும் இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைகிறது. மூளைக்கு தகவல் அனுப்பும் காரணிகளும் இதனால் வலுவடைகிறது. ‘ஆட்டிஸம்’ போன்ற மன இறுக்கம் தொடர்பான நோய்களில் இருந்து விடுபட கூட தோப்புக்கரணத்தை அமெரிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
வீட்டில் பூஜை செய்யும் போது கண்டிப்பாக இருக்க வேண்டிய பொருள்கள்..!
இப்படி நம் முன்னோர்கள் பல அற்புதங்களையும், மருத்துவத்தையும் உள்ளடக்கிய இந்த தோப்புக்கரணத்தை அன்று பிள்ளையார் முன் போட்டார்கள். இந்த தோப்புக்கரணத்தை கோவிலுக்குள் நுழைந்ததும் போட்டுவிட்டால் நமது மூளை புத்துணர்வு அடைந்து அங்குள்ள நேர்மறையான ஆற்றல் திறன்களை எளிதாக கிரகிக்க ஆரம்பிக்கும். இதனால் அந்த நாள் முழுவதும் மனதும் அறிவும் தெளிவாக இருக்கும். இதுதான் நாம் பிள்ளையார் முன்பு தோப்புக்கரணம் போடுவதற்கான அறிவியல் உண்மை.
இனி கோவிலுக்குள் சென்றதும் முதலில் பிள்ளையாரை வணங்கி தோப்புக்கரணம் போடுங்கள், குழந்தைகளையும் பழக்குங்கள்.