நிறைவடைந்த குஷி பட வேலைகள்.. இனி Spiritual டைம் - ஸ்ரீபுரம் தங்க கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சமந்தா!
இறுதியாக தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் "காத்து வாக்குல இரண்டு காதல்" திரைப்படத்தில் சமந்தா, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சிவா நிர்வாணா தற்பொழுது தெலுங்கில் இயக்கியுள்ள "குஷி" திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முற்றிலுமாக முடிவடைந்துள்ளது. இந்த திரைப்படத்தை தெலுங்கு மொழியில் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட படகுழு திட்டமிட்டுள்ளனர்.
விஜய் தேவர்கொண்டா நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ளார். இறுதியாக அவர் தெலுங்கு மொழியில் நடித்த யசோதா மற்றும் சகுந்தலம் ஆகிய திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் அடுத்தபடியாக வெளியாகவிருக்கும் குஷி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே ஒரு மாஸ் ஹீரோ.. அவருக்கு காதலியாக, அக்காவாக, மாமியாராக, அம்மாவாக நடித்த பிரபல நடிகை!
இறுதியாக தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் "காத்து வாக்குல இரண்டு காதல்" திரைப்படத்தில் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது தனது பட பணிகள் முடிந்துள்ள நிலையில் ஒரு ஆன்மீக பயணத்தை சமந்தா மேற்கொண்டுள்ளார்.
வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் பொற்கோவிலுக்கு சென்ற அவர் சுவாமி தரிசனம் செய்து திரும்பி உள்ளார். அங்கு உள்ள மத குருமார்களிடம் ஆசி பெற்ற அவர், பிறகு அந்த பொற்கோவிலில் உள்ள சுவர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தார். கோவில் நிர்வாக ஊழியர்கள் சமந்தாவிற்கு நல்ல முறையில் உபசரிப்பு அளித்து சிறப்பித்தனர்.
சமந்தா - விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'குஷி' படப்பிடிப்பு நிறைவடைந்தது!