போகர் சித்தர் கண்டறிந்த நவபாஷாணம்... தீரா நோய் தீர்க்கும் ரகசியம்!
மனிதர்கள் அறிந்த அமுதங்களில் முக்கியமானதாக நவபாஷாணத்தை கூறுவர். ஒன்பது விஷப் பொருள்களை தான் நவபாஷாணம் என்பர்.
அவர் வார்த்தைக்கு கட்டுப்பட்ட போகர் விமானம் மூலமாக சீனாவிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அந்த விமான கட்டுமான தொழில்நுட்பத்தை குறித்து சீனர்களுக்கு போகர் சொல்லியும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் நீராவி எஞ்சின் மூலம் இயங்கும் கடலில் செல்லும் இயந்திரம் ஒன்றினையும் கண்டுபிடித்ததாக கூறப்பட்டுள்ளது. போகரின் கையெழுத்து பிரதியில் சீனர்களுக்கு அவர் கற்று கொடுத்த மருத்துவ குறிப்புகளையும், அவரது கண்டுபிடிப்புகளையும் குறித்து எழுதப்பட்டுள்ளது. இதனை சப்தகண்டம் என்கின்றனர். தென்னிந்தியாவில் முக்தி அடைந்த போகரின் குரு காலாங்கிநாதர் சீனர் என்றும் கூறப்படுகிறது.
போகரின் அழிவில்லா ஆற்றல்!
பழனியில் உள்ள நவபாஷாண சிலை போகர் அளித்த கொடைதான். இந்த சிலை கல் கிடையாதாம். மூலிகைகளால் உருவாக்கப்பட்ட சிலையாகும். கற்சிலைகளே காலம் ஆக ஆக சேதம் ஆகும். ஆனால் இந்த நவபாஷாண சிலை கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டாலும் இன்றளவிலும் எவ்வித சேதமும் இல்லாமல் இருப்பது காண்போரை வியப்பில் ஆழ்த்தும். போகர் சித்தரின் நிர்விகல்ப சமாதி பழனி மலையில் தான் உள்ளது.
பழனி மலையில் உள்ள ஒரு குகையில் தான் கடைசியாக போகர் தவம் புரிய சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கிருந்து வெளியேறவில்லை. அதனால் அவர் இன்றும் அங்கே தவம் செய்து வருகிறார் என்ற நம்பிக்கை உள்ளது. பழனியில் புலிப்பாணி என்ற சித்தரின் பரம்பரையினர் தான் பூஜை செய்து வருகின்றனர். இவர் போகரின் சீடர்களில் ஒருவர்.
நவபாஷாண ரகசியம்!
மனிதர்கள் அறிந்த அமுதங்களில் முக்கியமானதாக நவபாஷாணத்தை கூறுவர். ஒன்பது விஷப் பொருள்களை தான் நவபாஷாணம் என்பர். மனிதர்கள் கொடிய நோய்களால் அவதிபடுவர் என முன்கூட்டியே அறிந்த சித்தர்கள் மக்களை மீட்க முடிவு செய்தனர். அதற்கான வழியை அறிய போகருக்கு அறிவுறுத்தப்பட்டது.
அப்போதுதான் முருகனின் வடிவில் நவபாஷாணத்தை செய்ய அவர் முடிவு செய்தார். நவபாஷாண முருகனை தழுவும் மக்கள் துன்பங்களில் இருந்து மீண்டு வருவதற்கு வழி செய்யப்பட்டது. சித்த மருத்துவத்தின் தந்தையான அகஸ்தியர், மற்ற சித்தர்களின் ஆலோசனையை பெற்று போகர் ஒன்பது விஷயங்களை கலந்து, பழனி முருகன் கோயிலில் தற்போதும் வழிபாட்டில் உள்ள முருகன் சிலையை செய்தார்.
நவபாஷாணங்களில் கிட்டத்தட்ட 64 வகைகள் இருப்பதாகவும், அதில் நீலி என்ற பாஷாணம், பிற 63 பாஷாணங்களையும் செயலிழக்க செய்யும் ஆற்றல் வாய்ந்தது என கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பழனி மலைக்கோவில், கொடைகானல் அருகில் உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில், சிவகங்கை பெரிச்சிகோவில் ஆகிய இடங்களில் நவபாஷாண சிலைகள் வழிபாடு நடக்கின்றன. நவபாஷாணங்களால் செய்யப்பட்ட சிலையை வழிபடும் நபர்களுக்கு நவக்கிரகங்களால் உண்டாகும் தீமைகள் விலகும். பழனி முருகன் சிலைக்கு அபிஷேகம் செய்யும் தண்ணீரை குடிப்பதால் தீராத நோய்களும் மறையும் என்பது ஐதீகம்.