நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆனி பெருந்திருவிழா - விமர்சையாக நடைபெற்ற திருத்தேரோட்டம்!
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில். விண்ணை முட்டும் பக்தி முழக்கங்களோடு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் இன்று ஆனி பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.
விண்ணை முட்டும் பக்தி முழக்கங்களோடு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில், சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.
இங்கு மாதந்தோறும் பல வகையான விழாக்கள் நடைபெற்று வந்தாலும், ஆனிப்பெருந் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆனிப் பெருந் திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : இந்த ஒரு பொருள் தவறான திசையில் இருந்தால் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்படும்.. உடனே மாற்ற வேண்டும்
ஒன்பதாம் நாள் திருவிழாவான இன்று, ஆனித்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, தேருக்கு எழுந்தருளினார்.
மேலும் இந்த திருவிழாவில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல்வகாப், ரூபிமனோகரன், நயினார்நாகேந்திரன், மேயர் சரவணன், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியன், திமுக மாநில வர்தக அணி இணை செயலாளர் மாலை ராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள் : மனிதனை ஆட்டிப்படைக்கும் நவகிரகங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?