Navagrahas: மனிதனை ஆட்டிப்படைக்கும் நவகிரகங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரையும் நவக்கிரகங்கள் ஆட்டிப்படைக்கின்றது. அது எவ்வாறு என்று இங்கு பார்க்கலாம்.
கிரம் என்னும் சொல் சமஸ்கிருதத்தில் இழுப்பது என்று பொருள். ஒன்பது கிரகங்களும் வான்வெளி மண்டலத்தில் தனித்தனியே திகழ்கிறது. இரும்பை காந்தம் எப்படி தன்னிடம் இழுக்கின்றதோ, அதுபோலவே நவகிரங்களும் தங்களுக்கே உரிதான இழுக்கும் சக்தியின் மூலமாக வாழ்க்கையில் ஏற்பட வேண்டிய சுக துக்கங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ள மனிதனின் மனநிலையை அதற்கு ஏற்றவாறு செயல்புரியச் செய்கிறது.
நவகிரகங்கள் என்பவை யாவை?
படைத்தல், காத்தல், அழித்தல் என பரம்பொருள் இருக்கும். மனித சரீரம் என்ற தேசத்திற்கு சகலோக நாயகரான பரம்பொருளே தலைவர் எனினும், அந்தச் சரீரத்திலுள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொரு கிரகத்தை அவர் அதிகாரியாக நியமித்திருக்கிறார். அவ்வாறு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் கிரகங்கள் அந்தந்த மனிதன் முன் ஜென்மங்களில் செய்த வினையை அனுசரித்து அதற்கு தகுந்த பலன்களைத் கொடுத்து வருகிறது.
சூரியன் - தந்தை (ஆத்மா, எலும்பு).
சந்திரன் - தாய் (மனம், இரத்தம்).
செவ்வாய் மற்றும் ராகு - சகோதரர்கள் (பலம், மஜ்ஜை).
புதன் - தாய்மாமன் (வாக்கு, தோல்).
குரு - புத்திரக்காரன் (ஞானம், தசை, மாமிசம்).
சுக்கிரன் - களத்திரக்காரகன் (காமம், இந்திரியம்).
சனி, கேது - ஆயுள் (துக்கம், நரம்புத் தசை).
ஒரு மனிதன் முன் ஜென்மத்தில் புண்ணியம் செய்தவனா, அவன் எலும்பு பலம் உள்ளதா, அவருடைய தந்தை எப்படிப்பட்டவர், அவர் ஆயுள் எப்படி என்பன போன்ற நுட்பங்களை எல்லாம் அவனுடைய சூரியன் இருக்கும் நிலையை அறிந்து சொல்ல முடியும். அதன் படி, கிரகங்கள் எல்லாம் நம் உடலில் குடி இருக்கிறது என்பதே உண்மை.
கிரகங்கள் நம் உடலோடு தொடர்பு கொண்டு இருப்பதால் அவற்றை திருப்தி செய்ய திருப்தி செய்யவும், உடலின் பாகங்களை வலிமைப்படுத்தவும், அந்தந்த கிரகங்களுக்கு நெல், துவரை, எள் போன்ற தானியங்களை நாம் வழங்குகிறோம் அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையிலும் நாம் சனி கிரகத்தை திருப்தி படுத்த நல்லெண்ணெய் கொண்டு குளிக்க வேண்டும் இதன் மூலம் நாம் நீண்ட ஆயுளை அடைய முடியும்.
இதையும் படிங்க: ஒன்பது கோள்களின் தோஷ நிவர்த்தி அளிக்கும் ஆன்மிக தலங்கள்!
இவை அனைத்தையும் நாம் சரியான முறையில் செய்து வந்தால் நம்முடைய உணவு, உடல், செயல்,சேவைகள் போன்ற எல்லாவற்றையும் நாம் நம்மை அறியாமலே கிரகங்களின் பிரதிக்காக செய்து வருகிறோம். இவராகவே கிரகங்கள் நம்முடைய தினசரி வாழ்க்கையில் நம்முடன் ஒன்றி செயல்பட்டு வருகிறது.