எந்த கிழமையில் எந்த பொருளை வாங்கினால் துரதிஷ்டம் வரும்-ன்னு தெரியுமா.?
ஜோதிடத்தின் படி, எந்தெந்த நாட்களில் என்னென்ன பொருட்களை வாங்க கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்து மதத்தில் ஜோதிடத்திற்கு என தனி சிறப்பு உண்டு. அந்த வகையில், ஜோதிடத்தின் படி வாரத்தின் ஏழு நாட்களும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகங்களின் ஆளுமையை கொண்டிருக்கும். எனவே, அந்தந்த நாட்களுக்கு உரிய பொருட்களை அந்நாளில் வாங்கினால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது ஐதீகம். அதேபோல, அந்த நாட்களில் சில பொருட்களை வாங்குவது உகந்தது அல்ல என்றும் சொல்லப்படுகின்றது. ஆகையால், எந்த நாட்களில் என்ன பொருட்களை வாங்க கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
எந்த நாளில் எந்த பொருள் வாங்க கூடாது:
1. திங்கட்கிழமை:
திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாள். எனவே, இந்நாளில் தானியங்கள் வாங்குவது நல்லதல்ல. அது போல வண்ணங்கள், தூரிகைகள், இசைக்கருவிகள் போன்ற கலை சம்பந்தப்பட்ட பொருட்களையும், நகல் புத்தகங்கள், விளையாட்டு தொடர்பான பொருட்கள், வாகனங்கள், மின்னணு சாதனங்கள் போன்றவற்றை ஒருபோதும் வாங்கவே கூடாது மீறினால், சிவபெருமான் கோபப்படுவார். மேலும், இது அசுபமாகவும் கருதப்படுகிறது.
2. செவ்வாய்க்கிழமை:
செவ்வாய்க்கிழமையில் பால், மரம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பொருட்களையும். உலோகங்கள் மற்றும் காலணிகளையும் வாங்கவே கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
3. புதன்கிழமை:
புதன்கிழமையில் வீடு, மனை, பத்திரம், அரிசி, மருந்து, மண்ணெண்ணெய் போன்ற பொருட்களை வாங்கவே கூடாது.
இதையும் படிங்க: சந்தோஷம் தரும் சந்திரன்; சனியோடு சேர்ந்தால் வரும் புனர்ப்பூ தோஷம்; பரிகாரம் என்ன?
4. வியாழன்கிழமை:
வியாழன் கிழமை குரு பகவானுக்கு உகந்த நாள். எனவே, இந்நாளில் கண்ணாடி பொருட்கள், பூஜை பொருட்கள், கூர்மையான பொருட்கள் போன்றவற்றை கட்டாயம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
5. வெள்ளிக்கிழமை:
வெள்ளியன்று மசாலா பொருட்களை வாங்கவோ அல்லது அரைக்கவோ கூடாது. மேலும் இந்நாளில் கத்தி, கத்திரிக்கோல் போஇரும்பு சார்ந்த பொருட்களையும் வாங்கவே கூடாது என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: Gold: தங்கமும், பணமும் வீட்டில் மலை போல குவிய வேண்டுமா? 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டியது இதுதான்!!
6. சனிக்கிழமை:
சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்த நாள். எனவே, இந்நாளில் உப்பு, அதிக இடையில பொருட்கள், வீடு, இரும்பு சம்பந்தமான பொருட்கள் போன்றவற்றை வாங்கவே கூடாது.
7. ஞாயிற்றுக்கிழமை:
ஞாயிற்றுக்கிழமை இரும்பு மற்றும் இரும்பு சம்பந்தமான பொருட்களை ஒருபோதும் வாங்க கூடாது என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D