சந்தோஷம் தரும் சந்திரன்; சனியோடு சேர்ந்தால் வரும் புனர்ப்பூ தோஷம்; பரிகாரம் என்ன?

மனோகாரகன். பெண்களின் உடல், மனத்தில் ஏற்படும் மாற்றங்கள், மாதவிடாய் பிரச்னைகள், கர்ப்ப விஷயங்கள் எல்லாம் சந்திரனின்  கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன.

Fertility and the Moon: Saturn Conjuction with moon Punarpu Dosha Parikaram

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனுடன் ராகுகேது சேரும்போது கிரஹண தோஷம் ஏற்படுகிறது. சனியும், சந்திரனும் பார்த்துக்கொள்வது புனர்பூ தோஷத்தை ஏற்படுத்தும். இதனால் திருமண தடை மட்டுமின்றி, பெண்களின் மனதளவில், உடல் அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கும் சந்திரனே காரணமாகிறார். பெண்களின் மாதவிடாய் பிரச்னைகள், கர்ப்ப விஷயங்கள் அனைத்தும் சந்திரனின்  கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன.    சந்திரனால் ஏற்படும் தோஷங்களுக்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம். 

சனி பெயர்ச்சி பலன் 2024: சனி தரும் சச யோகம்; தலையெழுத்து மாறும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

மனதளவில் ஏற்படும் மாற்றம்: ஜாதகத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் அவஅவரது ராசி கணிக்கப்படுகிறது. சனி, குரு, ராகு கேது பெயர்ச்சிக்கு பலன்கள் பார்ப்பதோடு ராசி நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்கிறோம். 

அமாவாசை, பவுர்ணமி என மாதந்தோறும் நிகழும் போது மனதளவில் மாற்றங்களை ஏற்படுத்தும். சந்திரனும் சூரியனும் ஒரே ராசியில் இருக்கும் போது அமாவாசை உண்டாகிறது. சந்திரனும் சூரியனும் எதிர் எதிர் திசையில் சூரியனிடம் இருந்து ஏழாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் போது பவுர்ணமி ஏற்படுகிறது. 

கர்ப்பத்திற்கும் சந்திரனுக்கும் தொடர்பு: சந்திரனுக்கும் மனித மனங்களுக்கும் தொடர்பு இருக்கிறது. உடல் அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கும் சந்திரனே காரணமாக இருக்கிறார். சந்திரனின்  கட்டுப்பாட்டுக்குள் பெண்களின் மாதவிடாய் பிரச்னைகள், கர்ப்ப விஷயங்கள் இருக்கின்றன. ஒரு பெண்ணின் உடலில் ஹார்மோன்களின் இயக்கத்தால் பருவ மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஹார்மோன் இயக்கத்தை சந்திரன் கட்டுப்படுத்தி வைத்திருப்பதால், பெண்ணுடைய கரு முட்டை கருத்தரிப்பதற்கும் சந்திரன் சஞ்சாரம் முக்கியமாகிறது.  

Gold: தங்கமும், பணமும் வீட்டில் மலை போல குவிய வேண்டுமா? 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டியது இதுதான்!!


சந்திரன் கிரகங்கள் கூட்டணி: சந்திரனுடன் ராகு கேது தொடர்பு ஏற்படும்போது கிரகண தோஷம் உண்டாகிறதுஅவரவர் வாங்கி வந்த வரம். கிரக சேர்க்கைகள் இருக்கும் இடமாகிறது. ஜாதக பலம், பூர்வ புண்ணிய பாக்கிய பலம் வைத்துதான் யோக, அவயோகங்கள் அமைகின்றன. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன், ராகு கேது, செவ்வாயுடன் சேரும்போது அவர் மிகச்சிறந்த மருத்துவராகிறார். 

திருமண தடை ஏற்படுத்தும் அமைப்பு: சனி, சந்திரன் கூட்டணி சேர்வது, பார்த்துக்கொள்வது புனர்பூ தோஷத்தை ஏற்படுத்தும். ஒரே ராசியில் சனியும், சந்திரனும் சேர்ந்திருப்பது,  சனியின் நட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது இந்த தோஷத்தை தரும். திருமண கூடிவந்தாலும்  திருமணம் முடியும் வரை ஒரு நிச்சயமற்றதன்மை நிலவும்.

ஞானிகள் துறவிகள்: புனர்பூ யோகம் பெற்றவர்கள் ஏதாவது ஒரு துறையில் சாதனையாளர்களாகபு, கழ் பெற்றவர்களாக இருக்கிறார்கள். சனி, சந்திரன் சேர்க்கை பெற்றவர்கள் ஞானிகளாக, துறவறம், பிரம்மச்சரியம், சன்யாச வாழ்க்கை வாழ்வார்கள். ஆதி சங்கரர், சுவாமி விவேகானந்தர், சுவாமி அரவிந்தர், காஞ்சி பெரியவர், ராமானுஜர் ஆகியோர் இந்த ஜாதகம் அமைந்தவர்கள். 

பரிகாரம் என்ன: புனர்பூ ஜாதக அமைப்பு கொண்டவர்கள் குலதெய்வ கோவிலுக்கு அடிக்கடி செல்வது நல்லது. முடி காணிக்கை கொடுக்கலாம். திருமணஞ்சேரி சென்று பரிகாரம் செய்தால் இந்த தோஷத்திலிருந்து விடுபடலாம். பௌர்ணமி நாட்களில் விரதம் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லலாம். ஒன்பது துறவிகளுக்கு வஸ்திர தானம் செய்து வந்தால் திருமண தடை நீங்கி நல்ல வரன் அமையும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios