ஜெயித்தாரா ஜெயிலர்?... ரஜினிக்கு கம்பேக் கொடுத்தாரா நெல்சன்? - Jailer முழு விமர்சனம் இதோ
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வஸந்த் ரவி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் முழு விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த நெல்சன், ரஜினிகாந்த் உடன் முதன்முறையாக இணைந்த திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் மோகன்லால், ஷிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வஸந்த் ரவி, யோகிபாபு, மிர்ணா, தமன்னா, ஜாக்கி ஷெராப், சுனில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
ஜெயிலர் திரைப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி இருக்கிறது. இப்படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கம் முன் ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர். ஜெயிலர் படத்தின் முதல் காட்சி முடிவடைந்துள்ள நிலையில், அப்படத்தின் விமர்சனங்களை ரசிகர்கள் டுவிட்டரில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். ஜெயிலர் படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... பீஸ்ட்டில் சொதப்பினாலும்... ஜெயிலர் படத்திற்காக நெல்சனுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் - அதுவும் இத்தனை கோடியா?
நல்ல காமெடி காட்சிகள், விநாயகன் மற்றும் தரமான இண்டர்வெல் பிளாக் உடன் படத்தின் முதல் பாதி நன்றாக இருந்தது. இரண்டாம் பாதி ஆவரேஜ் தான். குறிப்பாக தமன்னா மற்றும் சுனில் வரும் காட்சிகள் போர். இருப்பினும் இரண்டாம் பாதியில் வரும் டைகர் பிளாஷ்பேக் மற்றும் மாஸான கிளைமாக்ஸ் காட்சிகள் படத்தை காப்பாற்றி உள்ளன. அனிருத்தின் பிஜிஎம் ஒலிக்க ஷிவ ராஜ்குமார் மற்றும் மோகன்லால் ஸ்லோ மோஷனில் நடந்து வரும் காட்சிகள் தெறிக்கவிட்டுள்ளன என பதிவிட்டுள்ளார்.
ஜெயிலர் வின்னர். முதல் பாதி சூப்பராகவும், இரண்டாம் பாதி ஆவரேஜ் ஆகவும் உள்ளது. இது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஒன் மேன் ஷோ. இண்டர்வெல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் புல்லரிக்கும். மோகன்லால் மற்றும் ஷிவ ராஜ்குமார் ரோல்களுக்கு நல்ல வரவேற்பு. அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. நெல்சன் கம்பேக் கொடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
ஜெயிலர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். மிகச்சிறந்த கிளைமாக்ஸ், அக்காட்சியை பார்த்தபோது புல்லரித்தது. ரசிகர்களின் இதயத்துடிப்பை அறிந்து வைத்துள்ளார் ரஜினி. நெல்சன் தேர்ந்தெடுத்த கதைக்களம் வேறலெவல் என பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் ஜெயிலர் ஒரு தடைகளை உடைக்கும் படமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் இது நிறைய முறியடிக்கமுடியாத சாதனைகளை படைக்கும். விண்டேஜ் ரஜினிகாந்த் இஸ் பேக். பின்னணி இசை வேறலெவல், அது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
வாவ்... ரஜினி படம்னா இப்படிதான் இருக்கணும். இரண்டாம் பாதியில் ரஜினியின் பர்பார்மன்ஸ் அல்டிமேட். இதுவரை நெல்சன் எடுத்த படங்களில் இதுதான் சிறந்தது. ரஜினியின் மிரட்டலான நடிப்புக்கு அடுத்தபடியாக அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் என பதிவிட்டுள்ளார்.
முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி பிளாக்பஸ்டர். மொத்தத்தில் இது பிளாக்பஸ்டர் திரைப்படம். அனிருத் பிஜிஎம் வேறலெவல். ஹுகூம் பாடல் சும்மா தெறிக்குது. பிரம்மாண்ட வசூல் குவிக்கப்போகிறது என குறிப்பிட்டுள்ளார்.
துபாயில் ஜெயிலர் படம் பார்த்தேன். இது ரஜினி மற்றும் நெல்சன் இருவருக்குமே கம்பேக் படமாக அமைந்துள்ளது. ரஜினியின் முந்தைய பட சாதனைகளை இது முறியடிக்கும் என நினைக்கிறேன். ஜெயிலர் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
இப்படி ஒரு படத்தை எடுக்க நெல்சனால மட்டும்தான் முடியும். இனி நம்பர் ஒன் சூப்பர் ஒன்லாம் நெல்சன்தான். ரஜினிக்குப் பல வருசம் கழிச்சு ஒரு தரமான பிளாக்பஸ்டர். ஓபனிங் முன்ன பின்ன இருந்தாலும் இன்டர்வல் ப்ளாக் பைட்டுக்கு அப்றம் பாட்ஷாவைத் தூக்கி சாப்டுடுச்சு. அந்த பஞ்ச் வேறலெவல் என சிலாகித்து பதிவிட்டுள்ளார்.
ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாதியை பார்க்கும் போது யூகிக்கக்கூடிய காட்சிகளுடன் பேட்ட படம் போல் உள்ளது. படத்தை தாங்க ரஜினி முயற்சித்து இருக்கிறார். ஆனால் அந்த முயற்சி போதுமானதாக இல்லை. சில காட்சிகள் சொதப்பலாக உள்ளன என பதிவிட்டுள்ளார்.
பீஸ்ட் படத்தில் தான் எடுக்க நினைத்ததை எடுக்க முடியவில்லை என ஒரு பேட்டியில் தயங்கி தயங்கி சொல்லிருப்பார் நெல்சன். ஜெய்லரின் வெற்றி அதை உண்மையாக்கியிருக்கிறது என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், காமெடி காட்சிகள், கேமியோக்கள், இசை மற்றும் பிஜிஎம், திரைக்கதை ஆகியவை படத்திற்கு பாசிடிவ் ஆக அமைந்துள்ளன. முதல் பாதி சற்று மெதுவாக நகர்வது மட்டுமே நெகடிவ் ஆக உள்ளது மொத்தத்தில் ரஜினிக்கு சிறந்த படமாக ஜெயிலர் அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... அக்கட தேசம் முதல் அமெரிக்கா வரை... ஜெயிலர் ரஜினி ரசிகர்கள் அலப்பறையான கொண்டாட்டங்கள் இதோ