பீஸ்ட்டில் சொதப்பினாலும்... ஜெயிலர் படத்திற்காக நெல்சனுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் - அதுவும் இத்தனை கோடியா?
ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தை இயக்கி முடித்துள்ள நெல்சன் அப்படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்து இந்த் தொகுப்பில் பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ், ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளை இயக்கி வந்த நெல்சன், தமிழ் திரையுலகில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்த திரைப்படம் கோலமாவு கோகிலா. நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருந்த இப்படத்தை டார்க் காமெடி படமாக உருவாக்கி அனைவரையும் ரசிக்கவும் வைத்தார். அதோடு இப்படத்தில் அனிருத், நெல்சன் காம்போவில் பாடல்களும் வேறலெவல் ஹிட் அடித்தன.
இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்த நெல்சன் டாக்டர் என்கிற தரமான ஹிட் படத்தை கொடுத்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்ததும், நெல்சனுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் விமர்சன ரீதியாக சறுக்கினாலும், பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் வசூலித்து பிளாப் ஆகாமல் தப்பித்தது.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் படத்திற்கு மோகன் லால், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வாங்கிய சம்பளம்! எவ்வளவு தெரியுமா?
பீஸ்ட் வெளியாகும் முன்பே நெல்சன் கமிட் ஆன திரைப்படம் தான் ஜெயிலர். பீஸ்ட் ரிசல்டை பார்த்துவிட்டு அவரை படத்திலிருந்து நீக்க பேச்சுவார்த்தையும் நடந்தது. ஆனால் சூப்பர்ஸ்டார் சொன்ன வார்த்தையால் நெல்சனுக்கு ஜெயிலர் வாய்ப்பை வழங்கியது சன் பிக்சர்ஸ். சுமார் ஓராண்டு கடினமாக உழைத்து ஜெயிலர் படத்தை எடுத்து முடித்துள்ள நெல்சன், தற்போது அப்படத்தின் ரிசல்டுக்காக ஆவலோடு காத்திருக்கிறார். இப்படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், ஜெயிலர் படத்துக்காக நெல்சன் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் இப்படத்திற்கு ரூ.10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பீஸ்ட் படத்திற்காக ரூ.8 கோடி சம்பளமாக வாங்கி இருந்தார் நெல்சன். அப்படம் சொதப்பினாலும் நெல்சனின் சம்பளத்தில் கைவைக்காமல் வாரி வழங்கி இருக்கிறதாம் சன் பிக்சர்ஸ். ஜெயிலர் ஹிட் ஆனால் நெல்சனின் சம்பளம் 20 கோடிக்கு மேல் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... இமயமலை கிளம்பினார் ரஜினிகாந்த்! ஜெயிலர் ரிவ்யூ.. சூப்பர்ஸ்டார் சர்ச்சை குறித்து சூப்பர்ஸ்டார் அளித்த பதில் இதோ