அக்கட தேசம் முதல் அமெரிக்கா வரை... ஜெயிலர் ரஜினி ரசிகர்கள் அலப்பறையான கொண்டாட்டங்கள் இதோ

ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், உலகளவில் ரஜினி ரசிகர்களின் கொண்டாட்ட வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Jailer FDFS worldwide rajinikanth fans celebration videos viral

இன்று உலகமெங்கும் ஹாட் டாப்பிக் ஆக இருப்பது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் தான். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினி படம் ரிலீஸ் ஆகி உள்ளதால் ரசிகர்கள் அப்படத்தை தடபுடலாக கொண்டாடி வருகின்றனர். ஜெயிலர் படம் தமிழ்நாட்டைக் காட்டிலும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளாவில் சற்று முன்னதாகவே ரிலீஸ் ஆகிவிட்டது.

ஜெயிலர் படத்தின் முதல் காட்சி தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு மற்ற மாநிலங்களில் அதிகாலை 6 மணிக்கும் திரையிடப்பட்டன. ரஜினிக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளதால் வெளிநாட்டிலும் ஜெயிலர் பட ரிலீஸை ரஜினி ரசிகர்கள் மாஸ் ஆக கொண்டாடி உள்ளனர். குறிப்பாக அமெரிக்காவில் ஜெயிலர் கொண்டாட்டம் வேறலெவலில் உள்ளது.

இதையும் படியுங்கள்... Jailer review : டைகர் முத்துவேல் பாண்டியனாக மாஸ் காட்டினாரா ரஜினி? - ஜெயிலர் விமர்சனம் இதோ

ரஜினியின் போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதுமட்டுமின்றி ஜெயிலர் என்கிற வாசகத்துடன் கூடிய டீ-ஷர்ட் அணிந்தும் அமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல் கனடாவில், ஜெயிலர் படத்தின் முதல் காட்சி பார்க்க வந்த ரஜினி ரசிகர்கள் தியேட்டரில் ரஜினியின் கட் அவுட் முன்பு காவாலா பாடலுக்கு நடனமாடி வைப் செய்தனர்.

அண்டை மாநிலமான பெங்களூருவில் ரஜினியின் பேனருக்கு மாலை அணிவித்தும், அதிகாலையிலேயே தியேட்டர் முன் வாண வெடிகள் வெடித்தும் ரசிகர்கள் கொண்டாடிய வீடியோ காட்சிகள் இணையத்தை ஆக்கிரமித்து உள்ளன.

மும்பையை சேர்ந்த ரஜினி ரசிகைகள், ரஜினிகாந்தின் பேனருக்கு ஆராத்தி எடுத்து கொண்டாடிய வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... கேரளாவில் ஜெயிலர் ரிலீஸ் தேதி அதிரடியாக மாற்றம்... எல்லாத்துக்கும் காரணம் ரஜினி தானாம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios