Asianet News TamilAsianet News Tamil

தமிழக முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன - காங்கிரஸ் தலைவர் பெருமிதம்

புதுச்சேரி காங்கிரசை கண்டு மோடி பயப்படுகிறார் என்றும், அதனால் காங்கிரசை அழிக்க நினைக்கிறார் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே புதுச்சேரியில் தெரிவித்துள்ளார்.

we are fully satisfied for tamil nadu cm mk stalin's work said congress president mallikarjun kharge in puducherry vel
Author
First Published Apr 15, 2024, 7:42 PM IST

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இது மிக முக்கியமான தேர்தல். சுதந்திரத்திற்கு பிறகு எந்த ஒரு உள்துறை அமைச்சருக்கும் இவ்வளவு துறைகள் ஒதுக்கியதில்லை. சிபிஐ, அமலாக்கத்துறையை தவறாக கையாண்டு தங்களுக்கு எதிராக பேசுபவர்களை அமீத் ஷா பழிவாங்குகிறார். 

இதனால் ஒவ்வொரு மாநிலமாக சென்று ஜனநாயகத்தை பாதுகாக்க பாடுபடுகிறோம். மேலும் மோடி கொடுக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை. மோடி எங்கு சென்றாலும் காங்கிரசை குறை கூறுகிறார். 1989-ம் ஆண்டுக்கு பிறகு எந்த காந்தி குடும்பம் நாட்டை ஆண்டது? என கேட்ட கார்கே, காங்கிரசை கண்டு மோடி பயப்படுகிறார். அதனால் காங்கிரசை அழிக்க நினைக்கிறார் என்றார்.

“இந்த விவகாரத்தில் மோடி பேராசிரியர், நாங்கள் கத்துகுட்டி தான்” பாஜகவின் தேர்தல் யுக்தி குறித்து சிதம்பரம் ஓபன் டாக்

தொடர்ந்து பேசிய அவர், ஜனநாயகத்தை காக்க கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுகிறோம். தமிழகத்தை பொறுத்த வரை மகிழ்ச்சி. தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார். தேர்தல் கருத்து கணிப்புகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. மோடியை போல எண்ணிக்கையை கூற விரும்பவில்லை. கணிசமான இடங்களை பெறுவோம்.

பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத பாஜக கோவை தொகுதியில் எப்படி வெற்றி பெறும்? வேலுமணி கேள்வி

ஒரே நாடு ஒரே தேர்தல் எப்படி நடக்கும்? அது சாத்தியமற்றது. அமேதி தொகுதியில் ராகுல் போட்டியா.? அமேதி மற்றும் ரேபரலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லையே.? என்ற கேள்விக்கு தற்போது வரை  மூன்றாவது கட்டம் மட்டும் தான் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பிறகு தெரியும் என கார்க் பதில் அளித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios