மது போதை; கடலில் தத்தளித்த இளம்பெண் மற்றும் இளைஞர்களை காப்பாற்றிய ஊர்க்காவல் படை வீரர் - வைரல் வீடியோ

மதுபோதையில் கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் சிக்கி உயிருக்கு போராடிய இளம் பெண் மற்றும் இளைஞர்களை காப்பாற்றிய ஊர்க்காவல் படை வீரருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

The Home Guard police saved the young girl and youth who were stranded in the sea at Puducherry

வார இறுதி நாட்களில் வெளிநாடு மற்றும் மாநிலங்களைச் சார்ந்தவர்கள் புதுச்சேரிக்கு படையெடுப்பது வழக்கம்.

இங்கு வருபவர்கள் பல்வேறு சுற்றுலா தலங்களை சுற்றி பார்ப்பதுடன் கடற்கரையில் அமர்ந்து அதன் அழகையும் ரசித்து செல்வார்கள். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தலைமை செயலகத்தில் இருந்து சீகல்ஸ்  ஹோட்டல் வரை உள்ள கடல் பகுதியில் செயற்கையாக மணல் பரப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

The Home Guard police saved the young girl and youth who were stranded in the sea at Puducherry

இதையும் படிங்க..DMK: நல்ல பீஸா அனுப்பு.. பெண் புரோக்கரிடம் ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி - வைரல் ஆடியோ கிளப்பிய சர்ச்சை

சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் இந்த மணற்பரப்பில் அமர்ந்து பொழுதை மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர்.  இந்நிலையில் கடல் பகுதி ஆழம் என்பதால் அந்த பகுதியில் யாரும் குளிக்க வேண்டாம் என்று காவல்துறையும் அவ்வப்போது அறிவுறுத்தினாலும், ஆனால் அதையும் மீறி புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலில் குளிப்பது வாடிக்கையாக உள்ளது.

இன்று பெங்களூரைச் சேர்ந்த தியா சாக்கெட் மற்றும் ராஜசேகர் குமார் ஆகியோர் மதுபோதையில் கடலில் குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கிய அவர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனை அடுத்து அங்கு பாதுகாவல் பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படை வீரர்  அன்பரசன் இதை கண்டவுடன் சற்றும் ஒரு கனம் கூட யோசிக்காமல் கடலில் குதித்து உயிருக்கு போராடிய இரண்டு வாலிபர்களையும் கரைக்கு மீட்டு வந்தார்.

இதையும் படிங்க..Adani: 1.45 லட்சம் கோடி போச்சு.! பணக்காரர் பட்டியலில் பின்னடைவு - அடுத்த விஜய் மல்லையாவாக மாறுகிறாரா அதானி?

சிகிச்சைக்காக அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பெண் கடல் அலைகள் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார். அவரையும் அன்பரசன் உயிருடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

புதுச்சேரி கடற்கரையில் அடுத்தடுத்து கடல் அலையில் சிக்கி மூன்று பேர் உயிருக்கு போராடி அவர்களை மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் பெங்களூர் சேர்ந்த இரண்டு வாலிபர்களும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க..கள ஆய்வில் முதலமைச்சர்.. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் - முதல்வர் ஸ்டாலின் அடித்த அடுத்த சிக்சர் !!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios