பிரச்சினைய பேசி தீத்துக்குலாம் பெட்ரோல் குண்டுலாம் போட்றாதீங்க; எதிர்க்கட்சிகளை கலாய்த்த தமிழிசை

நாள் புதுவையில் ஆளுநராக பொறுப்பேற்றபோது மாளிகையில் தடுப்பு கட்டைகள் இருந்தன. தற்போது தடுப்பு கட்டைகள் இல்லை என்பதற்காக ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிவிடாதீர்கள் என ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.

state cm and governor should work combined in states says governor tamilisai vel

ஜம்மு - காஷ்மீர், லடாக் உதய நாள் விழா புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டார். அப்போது ஜம்மு காஷ்மீர் லடாக் மாநிலங்களில் உள்ள கலாச்சார நடனங்கள் நடைபெற்றது அப்போது துணை ஆளுநரும் நடன கலைஞர்களுடன் சேர்ந்து நடனமாடி உற்சாகமாக கொண்டாடினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை, புதுச்சேரிக்கு தான் ஆளுநராக வரும் பொழுது மூன்றடுக்கு பாதுகாப்பு இருந்தது. தடுப்பு கட்டைகளும் அமைக்கப்பட்டிருந்தது. நான் வந்த பிறகு பாதுகாப்பே வேண்டாம் என்று கூறியிருந்தேன். எந்த எதிர்க்கட்சியும் வலியுறுத்தியதின் பெயரில் தடுப்பு கட்டைகள் அகற்றப்படவில்லை. எதிர்க்கட்சி சகோதரர்கள் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் செய்வதை தவிர்க்க வேண்டும். தடுப்பு கட்டைகள் இல்லை என்பதற்காக பெட்ரோல் குண்டை வீசி விடாதீர்கள் என்று குறிப்பிட்டார்.

ஆளுநர் மாளிகையில் உற்சாகமாக நடனமாடிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

தொடர்ந்து பேசிய ஆளுநர் தமிழிசை, தமிழகத்தில் மசோதாக்கள் நிறைவேற்றுவது தொடர்பாக  கருத்து வேறுபாடு உள்ளது. தமிழக முதலமைச்சரும், ஆளுநரும் அமர்ந்து பேசி பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காணலாம். சண்டை போட்டுக்கொண்டு இருக்க வேண்டியது இல்லை. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தெலங்கானாவிலும் இதைத்தான் வலியுறுத்தினேன். முதலமைச்சர் வரட்டும் பேசட்டும் என்று எப்போதும் கருத்து வேறுபாடுகளோடு இருக்கும்போது மாநிலத்தில் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. கருத்து ஒற்றுமைகள் இருக்க வேண்டும். அது புதுச்சேரியில் இருக்கின்றது. அதைப்போல் பார்த்துக்கொள்வேன் என்று குறிப்பிட்டார்.

ரௌடிகளை வைத்து கட்சி நடத்தும் திமுக; மக்கள் திருப்பி அடித்தால் கட்சியே காணாமல் போய்விடும் - அண்ணாமலை எச்சரிக்கை

மேலும் மத்திய மருத்துவக்கவுன்சில் விதிமுறைகளை மீறி காலதாமதமாக மருத்துவக் கலந்தாய்வு நடத்தி சேர்ந்த மாணவர்கள் அச்சப்பட வேண்டாம். மத்திய அரசு தீர்வு காணும் என நம்புவதாக தமிழிசை நம்பிக்கை தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios