விரட்டப்பட்டது தெலங்கானாவில், வீராப்பு காட்டுவது புதுவையிலா? தமிழிசைக்கு எதிரான போஸ்டரால் சர்ச்சை
புதுச்சேரியில் சொல்லுங்க தமிழ் மியூசிக், சொல்லுங்க என்ற தலைவப்பில் துணைநிலை ஆளுநரை விமர்சித்து புதுச்சேரி திராவிடர் விடுதலை கழகத்தினர் ஒட்டியுள்ள போஸ்டரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் சொல்லுங்க தமிழ் மியூசிக், சொல்லுங்க என்ற தலைவப்பில் துணைநிலை ஆளுநரை விமர்சித்து புதுச்சேரி திராவிடர் விடுதலை கழகத்தினர் ஒட்டியுள்ள போஸ்டரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாகவும் மற்றும் போலி ஹாலோகிராம் ஒட்டி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துவதாகவும் தொடர்ந்து கலால் துறைக்கு புகார்கள் வந்தன.
இதனை அடுத்து புதுச்சேரி கலால் துறை துனை ஆனையர் சுதாகர் தலைமையிலான அதிகாரிகள் உப்பளம், வண்ணாரப் பேட்டையில் உள்ள மதுபான கிடங்கில் ஆய்வு செய்து அந்த நிறுவனத்திற்கு சொந்தமான கடைகளையும் சீல் வைத்தனர். இந்த நிலையில் புதுச்சேரி திராவிடர் விடுதலை கழகத்தினர் சொல்லுங்க தமிழ் மியூசிக் சொல்லுங்க... என்ற தலைப்பில் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அந்த போஸ்டரில்
“சீல் வைக்கப்பட்ட மதுபான தொழிற்சாலை
ஊழியர் நலனுக்காகவே அனுமதி அளித்தேன் என்பதா?
அப்ப 3 கோடி பணம் வாங்கியது பொய்யாக்கா?
மூடப்பட்ட பஞ்சாலை, பாப்ஸ்கோ, பாசிக் ,ரேஷன் கடை ஊழியர்கள் நாசமா போலாமா?
சொல்லுங்க தமிழ் மியூசிக் சொல்லுங்க...என்றும் ..
புதுவையும் காரையும் கூழுக்கு அழுவுது ஏனம் கொண்டைக்கு பூ கேட்குதா,?
விரட்டப்பட்டது தெலுங்கானாவில் வீராப்பு காட்டுவது புதுவையிலா..
என்ற வாசகங்களை அச்சிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
புதுச்சேரியில் ஏற்கனவே துணைநிலை ஆளுநர் தமிழிசையை விமர்சித்து போஸ்டர் ஒட்டிய திராவிட விடுதலைக் கழகத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.