Asianet News TamilAsianet News Tamil

புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம்.. பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அதிரடி தடை..!

புதுச்சேரி கடற்கரை சாலை, தாவரவியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வருகின்றனர்.

Puducherry Cotton Candy Banned... Food Safety Officials Action tvk
Author
First Published Feb 9, 2024, 12:26 PM IST

புதுச்சேரியில் மறு உத்தரவு வரும் வரை பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத்  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக தடை விதித்துள்ளனர். 

புதுச்சேரி கடற்கரை சாலை, தாவரவியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வருகின்றனர். இந்த பஞ்சு மிட்டாய் குழந்தைகளால் விரும்பி வாங்கப்படுகிறது. இதில், பஞ்சு மிட்டாயில் விஷத்தன்மை கொண்ட ரசாயனம் கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் புதுச்சேரி கடற்கரை சாலையில் விற்பனை செய்து கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் இருந்த பஞ்சு மிட்டாய்களை வாங்கி பரிசோதனை செய்துள்ளனர். 

இதையும் படிங்க: Periyar University: சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம்.. என்ன காரணம் தெரியுமா?

 அதில் ரோடமின் பி (RHODAMINE - B) என்ற புற்றுநோயை உண்டாக்கக்கூடிய விஷ நிறமி இருப்பது தெரிய வந்துள்ளது. இது ஊதுவத்தி மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் தொழிற்சாலை விஷ நிறமி ஆகும். குறைந்த விலைக்கு கிடைப்பதினால் இதனை வடமாநில இளைஞர்கள் தெரியாமல் வாங்கி, பஞ்சு மிட்டாய் தயாரித்து விற்பனை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதையும் படிங்க: மனைவியை கதறவிட்டு கொன்ற கணவர்.! நடந்தது என்ன? வெளியான பகீர் தகவல்..!

இந்நிலையில், புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். முறையான ஒப்புதலோடு விற்பனைக்கான உரிமம் பெற்ற பிறகுதான் மீண்டும் விற்பனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios