196 நாடுகளின் தேசிய கீதம் பாடிய 12 வயது சிறுமி… புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேரில் வாழ்த்து!!

196 நாடுகளின் தேசிய கீதம் பாடும் 12 வயது சிறுமிக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

puducherry cm rangaswamy congratulated 12 year old girl who sang the national anthem of 196 countries

196 நாடுகளின் தேசிய கீதம் பாடும் 12 வயது சிறுமிக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையை சேர்ந்த ஹேமந்த் - மோகனப்பிரியா தம்பதியின் மகள் சுபிக்ஷா. 12 வயதான இவரை பாடகராக்க வேண்டும் என அவரது பெற்றோர் சுபிக்ஷாவுக்கு பல நாடுகளின் தேசிய கீதத்தை சொல்லி கொடுத்தனர்.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு... டிச.12க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!!

அதன்படி உலக நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கீதங்களான 193 நாடுகளின் தேசிய கீதங்களை கற்றதோடு கூடுதலாக 3 நாடுகளின் தேசிய கீதங்களையும் அவர் கற்றுக்கொண்டு 196 தேசிய கீதங்களை பாடி அசத்தினார். இந்த நிலையில் புதுச்சேரிக்கு சென்ற அந்த சிறுமி தனது பெற்றோருடன் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அவரது முன்னிலையில் ஒரு சில நாடுகளின் தேசிய கீதங்களை பாடி காட்டினார்.

இதையும் படிங்க: ஜி20 தலைமை.. தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.! பிரதமர் மோடியிடம் உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின் !!

இதைக்கேட்ட முதல்வர் ரங்கசாமி சிறுமியின் திறமையை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனிடையே 196 நாடுகளின் தேசிய கீதங்களை பாடும் சிறுமியின் முயற்சியை உலக சாதனையில் இடம்பெற அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios