Asianet News TamilAsianet News Tamil

ஜி20 தலைமை.. தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.! பிரதமர் மோடியிடம் உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின் !!

2023-ஆம் ஆண்டுக்கான ஜி-20 தலைமையை இந்தியா ஏற்றிருக்கும் வேளையில் நமது பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

G20 presidency CM MK Stalin assures Centre of TN full support and co operation
Author
First Published Dec 6, 2022, 10:02 PM IST

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் டில்லியில் நடைபெற்ற ஜி20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மூத்த மத்திய அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற ஜி20 ஆலோசனை கூட்டத்தில் ஜி20 மாநாட்டை நடத்துவதற்கு தமிழகத்தின் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.

அப்போது பேசிய அவர், 2023-ஆம் ஆண்டுக்கான ஜி-20 தலைமையை இந்தியா ஏற்றிருக்கும் வேளையில் நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு முதற்கண் எனது பாராட்டுகள். இது நம் நாட்டுக்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒன்றாகும். உலக அளவில் பல்வேறு நாடுகளிடையே புரிதலை மேம்படுத்துவதில் நாம் மிக முக்கியப் பங்கை ஆற்ற வேண்டியுள்ளது. ஜி-20 நாடுகள் மட்டுமல்லாமல் அனைத்து உலக நாடுகளாலும் இந்தியா கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

G20 presidency CM MK Stalin assures Centre of TN full support and co operation

இதையும் படிங்க..தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது.. ஓங்கி அடிக்கும் சீமான் !!

‘அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமநீதி' ஆகிய உயர் விழுமியங்களை உலக அளவில் கொண்டு செல்ல நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தியா ஜி-20 தலைமையை ஏற்றதைத் தொடர்ந்து நடத்தப்படவுள்ள கருத்தரங்குகளுக்குத் தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என நான் உறுதியளிக்கிறேன்.

காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக இந்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்டுவதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இயற்கைப் பாதுகாப்பு இயக்கங்களை நிர்வகிக்கவும், காலநிலை மாற்றத்தைக் கையாளவும் 'தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்' என்ற பெயரில் சிறப்பு நோக்க நிறுவனத்தை (SPV) உருவாக்கியுள்ளோம்.

உலக அளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்து வகையிலும் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றுவோம்! இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் வாய்ப்புக்காக நமது மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

இதையும் படிங்க..மானின் ரத்தத்தில் குளியல்.! புற்றுநோய்க்கு மருந்தா.? சர்ச்சையில் சிக்கிய ரஷ்ய அதிபர் புடின் !!

இதையும் படிங்க..2026ல் முதல்வர்.! பிரதமர் வேட்பாளர் நீங்க தான் அண்ணா.! போற போக்கில் பாஜகவில் பூகம்பத்தை கிளப்பிய சூர்யா சிவா !

Follow Us:
Download App:
  • android
  • ios