மானின் ரத்தத்தில் குளியல்.! புற்றுநோய்க்கு மருந்தா.? சர்ச்சையில் சிக்கிய ரஷ்ய அதிபர் புடின் !!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்த பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவின் அதிபராக உள்ள விளாடிமிர் புடின் குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கம். புடின் இறந்துவிட்டார், தற்போது பதவியில் உள்ளது அவரது போலி, புடின் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூட கூறப்பட்டது உண்டு.
இதே போல ரஷ்ய அதிபர் புடின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. தற்போது மீண்டும் அதுபோன்ற ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்த வதந்திகளும் ஊகங்களும் இணையத்தில் தொடர்ந்து பரவி வரும் நிலையில், ஏப்ரல் மாத விசாரணை அறிக்கை மீண்டும் வெளியாகி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க..முதல்வர் வீட்டில் திடீரென வெடித்த துப்பாக்கி.. அதிர்ச்சியில் காவல்துறை.! பரபரப்பு சம்பவம்.!
ரஷ்ய புலனாய்வு செய்தி நிறுவனமான Proekt நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்ய அதிபர் புடின் எப்போதாவது மான் கொம்புகளிலிருந்து பெறப்பட்ட இரத்தத்தில் தன்னைக் குளிப்பாட்டுகிறார். இதன்மூலம் அவருக்கு நன்மைகள் ஏற்படும் என்று நம்புகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
புடினை தைராய்டு புற்றுநோய் மருத்துவர் ஒருவர் 166 நாட்களுக்கு 35 முறை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்ததாகவும், வளர்ந்து வரும் உடல்நலக் கவலைகளுக்கு மத்தியில் அவரது பயணங்களில் கூட அவருடன் சென்றதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது.. ஓங்கி அடிக்கும் சீமான் !!
அந்த மருத்துவர் தைராய்டு புற்றுநோயில் நிபுணத்துவம் பெற்ற புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர் யெவ்ஜெனி செலிவானோ என்று கண்டறியப்பட்டதாகவும், இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்ய அதிபர் மாற்று மருந்தாக மான் கொம்பு இரத்தத்தில் குளிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மான் கொம்பு இரத்தத்தில் குளிப்பது ரஷ்யா, சீனா மற்றும் கொரியாவில் பழங்கால பாரம்பரியம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், சைபீரியாவைச் சேர்ந்த அல்தாயின் சிவப்பு மான் கொம்புகள் உடல் புத்துணர்ச்சிக்கு உதவும் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை. ரஷ்ய அதிபர் புடின் சைபீரியவை சேர்ந்த மான் கொம்பு ரத்தத்தில் குளிப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த வாரம் அதிபர் புடின் தன்னுடைய மாஸ்கோ இல்லத்தில் தவறி விழுந்து தன்னிச்சையாக இயற்கை உபாதை கழித்ததாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..2026ல் முதல்வர்.! பிரதமர் வேட்பாளர் நீங்க தான் அண்ணா.! போற போக்கில் பாஜகவில் பூகம்பத்தை கிளப்பிய சூர்யா சிவா !