முதல்வர் வீட்டில் திடீரென வெடித்த துப்பாக்கி.. அதிர்ச்சியில் காவல்துறை.! பரபரப்பு சம்பவம்.!

கேரள முதல்வர் பினராயி விஜயன் இல்லத்தின் காவலர் அறையில் துப்பாக்கி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Gun Goes Off Accidentally in the Guard Room of CM Pinarayi Vijayan Residence

கேரளா முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உள்ள காவலர் அறையில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறுதலாக துப்பாக்கி வெடித்துச் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து விசாரணை நடத்த கேரள காவல்துறை உத்தரவிட்டுள்ளது.கேரள முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் இல்லத்தில், இன்று காலை 9.15 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Gun Goes Off Accidentally in the Guard Room of CM Pinarayi Vijayan Residence

காவலாளி அறையில் பணியில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரியால் துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது இந்த விபத்து நடந்தது என்றும்,  இதனால் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..இமாச்சலபிரதேசத்தில் 37 வருட சாதனையை உடைக்கும் பாஜக! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு சொல்வது என்ன ?

இதையும் படிங்க..குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றப் போவது யார்? வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios