Asianet News TamilAsianet News Tamil

புதுவை ஜிப்மரில் 12 மாத குழந்தைக்கு தவறான சிகிச்சை? மருத்துவமனையை முற்றுகையிட்ட பெற்றோரால் பரபரப்பு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 12 மாத கைக்குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறி குழந்தையின் பெற்றோர் மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

public protest against jipmer hospital for wrong treatment for 1 year old baby in puducherry vel
Author
First Published Oct 4, 2023, 6:38 PM IST

புதுச்சேரி நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தியாகு. இவர் இந்திய ஜனநாயக கட்சி புதுச்சேரி மாநில இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இவரது 12 மாத பெண்குழந்தை சாசிக்காவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்பு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.  கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுப்பதற்கு முன் தவறான மருந்து கொடுத்ததால் குழந்தை கோமா நிலைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மருத்துவர்கள் குழந்தையை வெண்டிலேட்டர் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவர்களிடம் குழந்தையின் நிலைமை குறித்து கேட்டால் சரியான பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மருத்துவரை கேள்வி கேட்டதால் குழந்தையின் உறவினர் மீது காவல் துறையினரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து குழந்தைக்கு கடந்த 2 மாதங்களாக வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு வழிநெடுக நின்று மலர் தூவி மரியாதை செலுத்திய அரசு மருத்துவர்கள்

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் மருத்துவரை அணுகும்போது அவர்கள் அலட்சியப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் குழந்தையின் உண்மை சிகிச்சை நிலை குறித்து தெரிவிக்காத ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்தும், தவறான சிகிச்சை அளித்த ஜிப்மர் மருத்துவரை கைது செய்ய கோரியும், பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு நீதி வழங்க கோரி குழந்தையின் உறவினர்கள் மற்றும் இந்திய ஜனநாயக கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

அப்போது அவர்கள் ஜிப்மர் மருத்துவமனை முன்பு புதுச்சேரி சென்னை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டதால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட குழந்தையின் தந்தை, தாய், உறவினர்கள், இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது காவல் துறையினருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios