நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட ஆள் இல்லை; நாராயணசாமி விமர்சனம்
புதுச்சேரியில் பாஜக சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் யாரும் முன்வரவில்லை என்றும், போட்டியிட விரும்புபவர்களிடம் ரூ.50 கோடி பேரம் பேசப்படுவதாகவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டி உள்ளர்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், உச்சநீதிமன்ற உத்தரவாலும், கண்டிப்பாலும் அம்பலமான தேர்தல் நன்கொடை பத்திர விவகாரத்தால் நாங்கள் ஊழல் செய்யாத கட்சி என கூறி வரும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா வெட்கித்தலைகுனிய வேண்டும். கட்சிக்கு பணம் சேர்க்க வேண்டும் என்பதற்காக அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அரசு அமைப்புகளை வைத்து மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை பெற்றுள்ளனர்.
இது மோடியின் இமாலய ஊழல், இதை உச்சநீதிமன்றம் வெளியில் கொண்டு வந்துள்ளது. இந்த பணத்தைக்கொண்டு தான் எதிர்கட்சிகளை கவிழ்க்கவும், நசுக்கவும் பயன்படுத்தப்பட்டது என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் தேர்தல் பத்திர நன்கொடை விவகாரம் ஒரு விஞ்ஞான ஊழல். இது குறித்து முறையான விசாரணை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. அதை பாஜக எதிர்கொள்ள வேண்டும்.
பிரதமரின் ரோட் ஷோ நடைபெறும் பகுதி முழுவதும் ரெட் சோனாக அறிவிப்பு; பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு
காங்கிரஸ்-திமுக அமர்ந்து பேசி இந்தியா கூட்டணி சார்பில் புதுச்சேரியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி உள்ளனர். புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவார். ஆனால் புதுச்சேரி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட யாரும் தயாராக இல்லை. ரூ.50 கோடி கொடுத்தால் தான் பாஜக சீட் வழங்கப்படும் என பேரம் பேசப்படுகிறது.
புதுவை மயான கொள்ளை விழா; 1 கி.மீ. நடந்து சென்று தரிசனம் செய்த முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் யார் வேட்பாளர் என்று ஆட்சியில் இருப்பவர்களால் முடிவு செய்யமுடியவில்லை. பணத்தை நம்பியும், லஞ்சத்தை பெற்றும் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு புதுச்சேரி பாஜகவினர் வந்து விட்டனர். புதுச்சேரியில் ஆட்சியில் உள்ளவர்கள் வெளிநாட்டிற்கு இரிடியம் கடத்தப்படுகிறது. மத்திய அரசின் அனுமதி இல்லாமல் வெளிநாட்டிற்கு செல்லும் அமைச்சர் மீது மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது பதவி நீக்கம் செய்யபப்ட வேண்டும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.