என்எல்சி பேச்சுவார்த்தை தோல்வி: இந்தி புரியவில்லை என ஒப்பந்த தொழிலாளர்கள் தரப்பு அதிருப்தி
என்எல்சி முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வருகின்ற 15ம் தேதி போராட்ட தேதி அறிக்கப்படும் என்று ஒப்பந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
நெய்வேலி என்எல்சி ஜீவா ஒப்பந்தம் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் படி, என்எல்சியில் நேரடி உற்பத்தியில் ஈடுபட்டு இருக்கும் 10000 ஒப்பந்தம் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அது வரை குறைபட்ச ஊழியராக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று, என்எல்சி நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது. இதன் மீது எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து வருகிற 15-ந்தேதி முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நோட்டீஸ் கொடுத்தனர்.
இது தொடர்பாக புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள மத்திய தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ்குமார் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் என்எல்சி அதிகாரிகள் திருகுமரன், உமாமகேல்வன் மற்றும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து சங்கத்தினர் வெளிநடப்பு செய்ததால் இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறுவது உறுதி ஆகிவிட்டது.
சயனைடு கலந்த மதுவை குடித்த 2 பேர் பலி; தஞ்சையை தொடர்ந்து மயிலாடுதுறையில் சோகம்
இது தொடர்பாக ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "சமரச அதிகாரி சட்டபூர்வமாக செயல்படவில்லை. அவருக்கு தமிழ் தெரியவில்லை. இந்தி எங்களுக்கு புரியவில்லை. தமிழ் பேசும் அதிகாரிதான் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். முக்கியமான விஷயத்தில் ஆயிரக்கணக்கான மெகாவாட் உற்பத்தி பாதிக்கக்கூடிய நிலையில், இவ்விவகாரத்தை மத்திய அரசு சரியாக கையாளவில்லை. அதனால், நான்கு ஆட்சேபணைகளை தெரிவித்து வெளிநடப்பு செய்தோம். வரும் 15-ம் தேதி மாலை வேலை நிறுத்த தேதி அறிவிப்பு பொதுக் கூட்டத்தில் எந்தத் தேதியில் இருந்து போராட்டம் தொடங்கும் என்று அறிவிப்போம்" என்று குறிப்பிட்டனர்.
கோவையில் MLA வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்ட நபர் மர்ம மரணம்