Asianet News TamilAsianet News Tamil

Breaking: சயனைடு கலந்த மதுவை குடித்த 2 பேர் பலி; தஞ்சையை தொடர்ந்து மயிலாடுதுறையில் சோகம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக்கில் வங்கிய மதுவை குடித்த 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மதுவில் சயனைடு கலக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி படுத்தி உள்ளார்.

Two die after consuming Tasmac liquor in Mayiladuthurai traces of cyanide found says Collector
Author
First Published Jun 13, 2023, 1:49 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த தத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த பட்டறை தொழிலாளிகளான பழனி குருநாதன், பூராசாமி ஆகிய இருவரும் நேற்று மாலை அரசு டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்தியுள்ளனர். மது அருந்திய சிறிது நேரத்திலேயே இருவரும் மயங்கி விழுந்துள்ளனர். மயங்கிய இருவரும் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக மருத்துவமனை முன் குவியத் தொடங்கினர். 15 நிமிடங்களுக்கு முன்பு வரை நன்றாக பேசிக் கொண்டிருந்த நபர்கள் மது அருந்தியவுடன் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இறப்புக்கு மது தான் காரணம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் MLA வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்ட நபர் மர்ம மரணம்

இருவர் உயிரிழப்பு குறித்து டிஎஸ்பி சஞ்சீவ்குமார் தலைமையிலான காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். உயிரிழப்பு குறித்து உண்மை காரணம் கண்டறியப்பட்டு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்கள் அருந்திய மது பாட்டில் தஞ்சையில் உள்ள ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்த பள்ளி மாணவி; 2 ஆண்டுகளுக்கு பின் பெண் கைது

இந்நிலையில், ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இருவரும் அருந்திய மதுவில் சயனைடு கலக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் சயனைடு கலந்த மதுவை குடித்து தஞ்சையில் 2 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது அதே டெல்டா பகுதியில் மேலும் 2 பேர் சயனைடு கலந்த மது குடித்தததால் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios