Asianet News TamilAsianet News Tamil

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மூலநாதர் சுவாமி கோவில் தேரோட்டம் - வடம் பிடித்து இழுத்த தமிழிசை

புதுவையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீமூலநாதர் சுவாமி கோவில் தோரோட்டத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வடம் பிடித்து தேரை இழுத்தார்.

more than 1000 years old traditional moolanathar temple car festival held well
Author
First Published Jul 1, 2023, 3:25 PM IST | Last Updated Jul 1, 2023, 3:25 PM IST

புதுச்சேரி அடுத்த பாகூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற வேதாம்பிகை சமேத ஸ்ரீமூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் தேரோட்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டிற்கான விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனை முன்னிட்டு கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, பிடாரி அம்மன் குதிரை வாகன வீதியுலா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பாலவிநாயகர், ஸ்ரீமூலநாதர், வேதாம்பிகை அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, கொடி மரத்திற்கு கலச அபிஷேகம், சிறப்பு பூஜை செய்து கொடியேற்றம் நடைபெற்றது.

கடனை கட்டாததால் வீட்டு பொருட்களோடு சேர்த்து வீதியில் வீசப்பட்ட முதியவர்; பொதுமக்கள் அதிச்சி

தொடர்ந்து  தினமும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதனை துணைநிலை ஆளுநர் தமிழிசை, சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். விழாவில் பங்கேற்ற ஆளுநருக்கு தலையில் பரிவட்டம் கட்டி பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

30 இடங்களில் வெட்டு; தலை துண்டித்து மனைவியை கொடூரமாக கொன்ற கணவர் - திருப்பூரில் பரபரப்பு

கோயிலுக்குள் சென்று வழிபட்டு வெளியே வந்த ஆளுநரை பெண்கள் பலரும் ஆர்வத்துடன்  கை கொடுத்தனர்.ஒரு பெண் மிக உற்சாகமாக.. I love u madam..i love u madam என இரு முறை கூற ஆளுநர் சிரித்தபடியே காரில் ஏறி சென்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios