Asianet News TamilAsianet News Tamil

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு; புதுவை ரயில் நிலையத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

விலை வாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

marxist communist party members did train protest in puducherry vel
Author
First Published Sep 7, 2023, 4:12 PM IST

விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்திருந்தனர். அதன்படி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமையில் பேரணியாக புறப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு  ரயில் நிலையத்தை அடைந்தனர்.

ரயில் நிலையத்தை நோக்கி புறப்பட்ட போராட்டக்காரர்களை காவல் துறையினர் தடுப்பு கட்டை அமைத்து தடுக்கவே தடுப்பு கட்டளை  மீறி போராட்டக்காரர்கள் ரயில் நிலையத்தை நோக்கி ஓடினர். அப்பொழுது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி பயணிகள் ரயில் வரும்பொழுது போராட்டக்காரர்கள் தண்டவாளத்தில் படுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

பட்டியலின மக்களுக்கான நிதியை செலவு செய்த தமிழக அரசை கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக

இதனால் பதற்றம் அடைந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்த முயலும் போது கடுமையான தள்ளுமுள்ளு, மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்களை காவல் துறையினர் ரயில் தண்டவாளத்தில் இருந்து தரதரவென இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போராட்ட களம்  சிறிது நேரத்தில் போர்க்களமாக காட்சியளித்தது.

கெத்துக்காக இப்படிலாமா செய்வீங்க? கொத்தாக அள்ளிச்சென்ற காவல்துறை

இதனை அடுத்து ரயில் நிலையத்திற்கு ரயில் சென்றவுடன் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios