Asianet News TamilAsianet News Tamil

ஆபாசமாக எழுதிய பேனாவுக்கு நினைவுச்சின்னமா? எச். ராஜா கேள்வி

இந்துகளுக்கு எதிராகவும், ஆபாசமாகவும் எழுதிய பேனாவுக்கு நினைவுச் சின்னம் தேவையா என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

h raja condemns pen statue in sea
Author
First Published Feb 11, 2023, 12:31 PM IST

பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர்  எச். ராஜா கலந்து கொண்ட 2023 -ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் நடைபெற்றது. இதில் நிதிநிலை அறிக்கை குறித்து தொண்டர்களிடையே ராஜா விரிவாக எடுத்துக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய செயலாளர் எச். ராஜா, நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சம் மூலதன செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நிதி பற்றாக்குறை 5.1% குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 2025-26 பட்ஜெட்டுக்குள் நிதி பற்றாக்குறை முழுமையாக தீரும்.

அனைத்து தரப்பு மக்களும் பயனடைக்கூடிய அளவில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பட்ஜெட் ஆகும். இருந்தாலும் பிரதமர் மோடி தாக்கல் செய்து விட்டாரே என்ற ஒரே காரணத்துக்காக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

எதிர்கட்சிகள் கூறுவது போல் இது தேர்தலுக்கான பட்ஜெட் தான். ஏன் என்றால் ஏழை எளிய மக்களுக்கு போடப்பட்ட பட்ஜெட். அதனால் மக்கள் வாக்களிப்பார்கள் என்று குறிப்பிட்ட எச். ராஜா இது விடியல் ஆட்சியா? அய்யையோ அமைச்சர்கள் தொண்டர்களையே அடிக்கிறார்கள். இது என்ன சர்க்கார்? 

தரமற்ற சாலை; கேள்வி கேட்ட பொதுமக்களுக்கு தர்ம அடி கொடுத்த திமுக கவுன்சிலர்

மூன்று மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது என்ன கலவரம் நடந்தது என்று வினவிய  அவர் திருமாவளவனும், சீமானும் மனித சங்கிலி நடத்தினால் போதுமா? என்றும் நீதிமன்ற உத்தரவை காவல்துறையும், அதிகாரிகளும் பின்பற்றுவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் விடியல் ஆட்சி நடக்கிறது என்று ஸ்டாலின் சொன்னால் ஈரோடு இடைத்தேர்தல் அவருக்கு சரியான பாடத்தை புகட்டும். இந்துக்களுக்கு விரோதமாகவும், ஆபாசமாகவும் எழுதிய பேனாவுக்கு நினைவுச்சின்னம் தேவையா? என்று கேள்வி எழுப்பிய அவர் பேனா சின்னம் வைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அதனால் பேனா வைக்க கூடாது என்றார்.

ஒரு குடும்ப அட்டைக்கு 2 கிலோ அரிசி கமிஷன்; ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய சாமானியர்

தொடர்ந்து பேசுகையில், திராவிட மாடல் பேசிய தலைவர்களின் ஊழல்களையும், ஒழுக்கம் கெட்ட வாழ்க்கையும் தான் நம்மால் பார்க்க முடிகிறது. ஊழலுக்கும் ஒழுக்கமின்மைக்கும் பேனா நிமிரனுமா? அதானி பிரச்சினையால் வங்கிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதை உணர்ந்து தான் எதிர்க்கட்சிகள் அமைதியாகிவிட்டன என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios