புதுவையில் நடைபெறும் ஊழல்களுக்கு எனக்கு தொடர்பா? தமிழிசை ஆவேசம்
புதுவையில் நடைபெறும் ஆட்சி ஊழல் மிகுந்ததாக இருப்பதாகவும், இதற்கு நான் துணைபோவதாக கூறுவது முற்றிலும் தவறு என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக "வளர்ச்சியடைந்த பாரதம்" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பிரதமர் மோடி புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி லட்சியப் பயண பங்கேற்பாளர்கள் மத்தியில் காணொளி வாயிலாக உரையாற்றும் நிகழ்ச்சி சேலியமேடு கிராமப் பஞ்சாயத்து அரங்கனூர் கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர். விழாவில் மத்திய அரசின் பல்வேறு திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு ஆளுநர் மற்றும் முதல்வர் வழங்கினார்கள்.
ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்ட நாகாலாந்து தினவிழா; நடனமாடி கொண்டாடிய ஆளுநர் தமிழிசை
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மூலை முடுக்குகளில் எல்லாம் கூட மத்திய அரசின் திட்டங்கள் போய் சேர்ந்துள்ளது. மேலும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக கிளினிக்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மழை காலங்கள் வந்தால் அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகளில் எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மருந்து மாத்திரைகள் தயாராக உள்ளன. இது தொடர்பாக யாரும் குரை கூற வேண்டாம் என்றார்.
மேலும் புதுவையில் நடைபெற்று வரும் ஆட்சி, ஊழல் மிகுந்த ஆட்சியாக இருப்பதாகவும், இதில் ஆளுநருக்கும் சம்மந்தம் உள்ளதால் இந்த ஊழல் தொடர்பாக எதிர்கட்சியினர் குடியரசு தலைவரிடம் புகார் தெரிவிக்க உள்ளதாக கூறுகின்றனர். இதில் எனக்கு சம்பந்தம் இருக்கும் என்று எப்படி சொல்ல முடியும்? என ஆவேசமாக தெரிவித்தார்.