புதுவையில் அரசு பேருந்துக்குள் மழை நீர் புகுந்ததால் அதில் பயணம் செய்த பயணிகள் சுமார் 15 மணி நேரம் கடும் அவதிகளுக்கிடையே பயணம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

புதுச்சேரி பிராந்தியமான மாகேவிலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்ட புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் என்று அழைக்கக்கூடிய பி. ஆர். டி. சி. பேருந்தில் புதுச்சேரி செல்வதற்காக 740 ரூபாய் கட்டணத்தில் சுமார் 36 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் இருக்கைகள் உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்தப் பேருந்தில் சுமால் 50க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்து உள்ளனர்.

பேருந்து புறப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் கனமழை பெய்ய தொடங்கவே மழைநீர் முழுவதும் பேருந்தின் மேற்கூரை வழியாகவும், ஜன்னல்கள் வழியாகவும் உள்ளே புகுந்ததால் பேருந்தில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் உட்கார இடம் இல்லாமலும், நிற்க இடம் இல்லாமலும் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

பாஜகவின் வெறுப்பு அரசியலால் இந்தியா பலியாகக்கூடாது... INDIA கூட்டணி இந்தியாவை காப்பாற்றும்- ஸ்டாலின் உறுதி

மாகேவில் இருந்து புதுச்சேரிக்கு 15 மணி நேரம் பயணம் செய்யும் நிலையில் பேருந்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது. சுமார் 2 மணி நேரமாக மழை விடாமல் பெய்ததால் பேருந்து முழுவதும் மழை நீரால் நிரம்பி பயணிகள் கடும் அவதிக்கு ஆளாக்கினார்கள்.

மேலும் பேருந்தில் பயணம் செய்தவர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு பாதிக்கப்பட்டது இல்லாமல் அவர்கள் எடுத்து வந்த உடமைகளும் மழை நீரில் நனைந்ததால் கடும் பாதிப்புக்கு ஆளாகினார்கள். இந்த காட்சியினை அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மன்னிப்பு கேள்.. போலீசில் புகார்.. 10 ஆண்டு பிளாஷ்பேக்.. சனாதனம் பற்றி உதயநிதி பேச்சுக்கு தலைவர்கள் ரியாக்சன்

ஏற்கனவே புதுச்சேரியில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வரும் பி. ஆர். டி. சி. பேருந்தில் பிரேக் டவுன் உள்ளிட்ட பல்வேறு கோளாறுகளால் பேருந்துகள் அடிக்கடி பாதி வழியில் நின்று பயணிகள் தவிப்புக்கு உள்ளாகி வருவவது தொடர்கதை ஆகி வரும் நிலையில் மாகேலிருந்து புதுச்சேரிக்கு வந்த பேருந்தில் மழை நீர் ஒழுகி பேருந்தில் பயணம் செய்த பயணிகள் உட்கார இடம் இல்லாமலும், நிற்க இடம் இல்லாமல் இரண்டு மணி நேரம் தவிர்த்த வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.