மன்னிப்பு கேள்.. போலீசில் புகார்.. 10 ஆண்டு பிளாஷ்பேக்.. சனாதனம் பற்றி உதயநிதி பேச்சுக்கு தலைவர்கள் ரியாக்சன்
கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.
சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள்.
உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம். எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள்.
சனாதனம்
அதற்கு என்னுடைய பாராட்டுக்கள். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் வேறு ஒன்றும் கிடையாது. சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது அதாவது மாற்ற முடியாதது.யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம்.
திமுக Vs பாஜக
எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும்” என்று கூறியிருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சார்ந்த தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அண்ணாமலை கருத்து
இதற்கு பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம் வருவதற்கு முன்பே, சனாதன தர்மம் என்ற வார்த்தை இருந்தது என்பது நிதர்சனமான உண்மை. கிறிஸ்துவ மிஷனரிகளின் சித்தாந்தையே நீங்களும், உங்கள் தந்தையும் உங்களுடைய சித்தாந்தமாக பெற்றுள்ளீர்கள். தமிழகம் ஆன்மிக பூமி, இதுபோன்ற நிகழ்ச்சியில் மைக்கை பிடித்துக் கொண்டு மனகுமுறல்களை கொட்டதான் உங்களால் முடியும்.
உதயநிதி யார்?
நேற்று உதயநிதி ஸ்டாலின் பேசியதை நாட்டின் 142 கோடி மக்களும் கண்டிக்க வேண்டும். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீதான வெறுப்பு நேற்று வெளிவந்துள்ளது, குறிப்பிட்ட கலாச்சாரத்தை அழிப்பதே இனப்படுகொலை. சனாதன தர்மத்தை ஒழிக்க உதயநிதி ஸ்டாலின் யார் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை.
காயத்ரி ரகுராம்
நடிகையும், பாஜகவின் முன்னாள் நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் எக்ஸ்-ல் வெளியிட்டுள்ள பதிவில், இந்து மதத்தின் பெயரால் பா.ஜ.க கிரிமினல்களின் அட்டூழியத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. காமலயாவிற்கு பதில் தேவை இல்லை. அப்படிப்போடுங்க.” என்று உதயநிதி ஸ்டாலினின் பேட்டியை பதிவிட்டுள்ளார்.
குட் நியூஸ்.. எஃப்டிக்கு 8%க்கும் அதிகமாக வட்டியை உயர்த்திய 3 வங்கிகள்.. என்னென்ன தெரியுமா.?
மத்திய அமைச்சர் அமித் ஷா
இதுகுறித்து விழா ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “வாக்கு வங்கி அரசியலுக்காக சனாதன தர்மத்தை திமுக அவமதித்துள்ளது. இது மக்கள் விரோதப்போக்கு” என்று தெரிவித்துள்ளார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், "அந்த அரசியல்வாதியின் அறிக்கை என்னிடம் உள்ளது, அதே அறிக்கையை காங்கிரஸ் எம்.பி.களில் ஒருவரான ப.சிதம்பரமும் வெளியிட்டார். காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் இதேபோன்ற அறிக்கையை நான் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பார்த்தேன்.
காங்கிரஸ் பதில் என்ன?
தமிழகத்தைச் சேர்ந்த அந்த அமைச்சரை அவர் அம்பலப்படுத்தியதால் அவரைக் கண்டிக்க விரும்பவில்லை.ஆனால் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணியில் நீடிக்குமா என்பதுதான் கேள்வி? ராகுல் காந்திக்கு இது ஒரு சோதனை.அவர் மதிக்கிறாரா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். சனாதன தர்மமோ இல்லையோ, அவர் திமுகவுடன் உறவை முறித்துக் கொள்ளவில்லை என்றால், அவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்பது உறுதியாகிவிடும்” என்று பேட்டி அளித்துள்ளார்.
பாஜக தலைவர் ஜே.பி நட்டா
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் (இந்திய கூட்டணி உறுப்பினர்கள்) மூன்று நாட்களுக்கு முன்பு மும்பையில் ஒரு வியூகத்தை வரைந்தபோது இந்த கருத்தை தெரிவித்தார். இது சனாதன தர்மத்தை ஒழிப்பதற்கான அவர்களின் அரசியல் உத்தியா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக தலைவர் ஜே.பி நட்டா.
வானதி சீனிவாசன்
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவும், பாஜக மூத்த தலைவருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுகவையும், உதயநிதி ஸ்டாலினின் பேச்சையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவின்போது எனது மனைவி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என பிரகடனம் செய்த உதயநிதி, "சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது. மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாதது என்று பொருள். எதுவும் நிலையானது அல்ல.
ஆட்சியில் இல்லாத திமுக
எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எல்லாவற்றையும் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காவே கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட இயக்கமும் உருவானது. வீட்டுப் படிக்கட்டை தாண்டக் கூடாது என சனாதனம் பெண்களை அடிமைப்படுத்தியது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா காய்ச்சல் போன்றவற்றை எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும். அதுபோல ஒழிக்கப்பட வேண்டியதே சனாதனம்" என்று பேசியிருக்கிறார். 10 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து, தமிழ்நாட்டு மக்களால் திமுக விரட்டப்பட்டிருந்தது.
சமஸ்கிருத பெயர்கள்
அப்போது திமுகவில் இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் என்று நீலிக் கண்ணீர் வடித்தவர்தான் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.சனாதனம் என்பது நீடித்து நிலைத்து நிற்கும் ஒரு வாழ்வியல் நெறி. அறம். தத்துவம். சனாதன தர்மமே இன்று இந்து மதம் என்றழைக்கப்படுகிறது. சனாதனம் என்ற பெயர் மட்டுமல்ல, திராவிடம், கருணாநிதி, உதயசூரியன், உதயநிதி எல்லாம் சமஸ்கிருதப் பெயர்கள்தான்.
இந்து மதம்
இந்து மதத்திற்கென்று எந்தத் தலைவரும் இல்லை. இந்து மதம் போன்று கட்டற்ற சுதந்திரம் கொண்ட மதம் எதுவும் இல்லை. இங்கு தனி மனிதனும் கடவுள் ஆகலாம். அவ்வளவு சுதந்திரம். இந்து மதம் சந்தித்தது போன்ற மாற்றங்களை உலகில் எந்த மதமும் சந்தித்திருக்காது. காலம் தோறும் மாற்றங்களை ஏற்றுக் கொண்டதால்தான் பல்லாயிரம் ஆண்டுகள் முயற்சித்தும் இந்து மதத்தை யாராலும் அழிக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் பதிலடி
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சனாதனம் பற்றி நான் பேசியது சரியானது தான். பா.ஜ.க.வினர் நான் பேசியதை திரித்து பேசி வருகின்றனர். இந்தியா கூட்டணி வலுப்பெற்று வருவதை திசை திருப்புவதற்காக தான் பாா.ஜ.க.வினர் சனாதனம் குறித்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர்.எதுவும் மாறக்கூடாது, எல்லாமே நிலையானது என்பதே சனாதனம் என்று விளக்கம் கொடுக்கிறார்கள். எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.
எதையும் சந்திக்க தயார்
எல்லோருக்கும், எல்லாமே கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். பல ஆண்டுகளுக்கு முன் பெண்கள் படிக்கக்கூடாது என்று கூறினார்கள், பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று கூறினார்கள், கோயில்களுக்குள் செல்லக்கூடாது என்றார்கள். இந்த மூன்றையும் நாம் மாற்றி இருக்கிறோம். இதுதான் திராவிட மாடல். என்ன வழக்குப் போட்டாலும் அதை சந்திக்க தயார்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
உதயநிதி மீது புகார்
சனாதன தர்மம் குறித்த தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சட்டவிரோதமானது என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2000 Note : உங்களிடம் 2000 ரூபாய் நோட்டு இருக்கா.? உடனே ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பை பாருங்க !!