எனக்காக போக்குவரத்தை தடை செய்ய வேண்டாம்; முதல்வரின் திடீர் முடிவால் பொதுமக்கள் நெகிழ்ச்சி
புதுச்சேரி நகரில் காரில் பயணம் செல்லும் போது தனக்காக போக்குவரத்து சந்திப்பில் உள்ள சிக்னல்களை நிறுத்த வேண்டாம் என முதல்வர் ரங்கசாமி காவல் துறையினருக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில் அவர் காரில் செல்லும் போது சிக்னலில் நின்று சென்றார்.
புதுச்சேரியில் ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட முக்கிய உயரதிகாரிகள் காரில் பயணம் செல்லும்போது முக்கிய சாலை சந்திப்பில் உள்ள சிக்னல்களை முடக்கி அவர்கள் விரைந்து செல்ல ஏற்பாடு செய்கின்றனர். இந்நிலையில் வார இறுதி நாட்களில் புதுச்சேரிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.
மேலும் கடும் வெயிலின் தாக்கத்தால் சிக்னலில் நிறுகும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை முதலமைச்சர் ரங்கசாமி கார் செல்லும்போது சிக்னல்களை நிறுத்தி வைத்து முதல்வரை மட்டும் செல்ல காவல் துறையினர் வழிவிட்டனர். அப்போது அவர் செல்லும்போது மூன்று வழிகளிலும் கடும் வெயிலில் மக்கள் காத்திருப்பதை கண்டார். இதனைத்தொடர்ந்து போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளை அழைத்து எனது கார் வரும் போது எந்த சிக்னலையும் நிறுத்தக்கூடாது. மக்களோடு நின்று முறைப்படி சாலையை கடக்கின்றேன் எனக்காக மக்கள் பாதிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் தான் வரும் பாதையை போக்குவரத்து சிக்னலில் உள்ள காவலர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்து அவர்களை சிரமப்படுத்த வேண்டாம் என தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில் இன்று அவர் ராஜூவ் காந்தி சதுக்கம் சிக்னலில் காரில் வந்த போது சிக்னல் போடப்பட்டிருந்ததால் மக்களோடு சிக்னலில் நின்று சிக்னல் போடப்பட்ட பிறகே கிளம்பி சென்றார்.
பொன்னமராவதியில் சரக்கு வாகனம் மோதி வடமாநில தொழிலாளர் தலை சிதைந்து பலி
முதல்வரின் உத்தரவை தொடர்ந்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செல்லும்போது பொதுமக்களுக்கு இடையூறாக போக்குவரத்து சிக்னலை நிறுத்த வேண்டாம் என்றும் காவல்துறைக்கு அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.