Asianet News TamilAsianet News Tamil

திருச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய், சேய் உயிரிழப்பு - உறவினர்கள் சோகம்

திருச்சி மாவட்டத்தில் 3வது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தையும், தாயும் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

newborn baby and lady died in trichy government hospital
Author
First Published May 23, 2023, 2:14 PM IST

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்  அருகே உள்ள சுனைபுகநல்லூர் வடகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராசு. இவர் டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றி செல்லும் வாகனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி  சூரியகாந்தி (வயது 38). இவர்களுக்கு ராகுல் (15) மற்றும் சாதனா (9)  என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் 3வது  முறையாக கர்ப்பமடைந்த சூரியகாந்தி பிரசவத்திற்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு  அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே இரண்டு குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ள நிலையில் 3வது குழந்தை 10 மாதம் நிறைவடைந்தும் பிரசவ வலி வராததால் கடந்த 20ம் தேதி சூரியகாந்திக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்துள்ளனர். அப்போது ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. 

பொன்னமராவதியில் சரக்கு வாகனம் மோதி வடமாநில தொழிலாளர் தலை சிதைந்து பலி

இதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த சூரியகாந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டும் அதிகமான ரத்தப்போக்கு  இருந்துள்ளது. இதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று சூரியகாந்தியின்  கர்ப்பப்பை  அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய போது  அதிக மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். 

கோடை மழைக்கே தாக்குபிடிக்காத விளையாட்டு மைதானம்; முதல்வர் திறந்து வைத்த 8 மாதத்தில் சேதம்

இதனைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான சுணைப்புக நல்லூருக்கு வந்தது. கிராம மக்கள், உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் சூரியகாந்தியின் மகள் சாதனா துக்கத்தை தாங்க முடியாமல் அம்மா என்னை விட்டுட்டு போயிட்டியே என கதறி அழுத சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியது. பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்குச் சென்ற தாயும் பெற்றெடுத்த சேயும் சுடலமாக வீடு திரும்பினர். பிரசவத்தில் தாயும் சேயும் சம்பவத்தால் அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இது குறித்து வாத்தலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios