கோடை மழைக்கே தாக்குபிடிக்காத விளையாட்டு மைதானம்; முதல்வர் திறந்து வைத்த 8 மாதத்தில் சேதம்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட வஉசி மைதானத்தின் மேற்கூரை அரை மணி நேரம் பெய்த கோடை மழைக்கே தாக்கு பிடிக்காமல் சேதமடைந்தது.

voc ground gallery collapse for 30 minutes summer rain in tirunelveli

நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரும் பொருட் செலவில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டமும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீர்படுத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி பாளையங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள வ.உ.சி. விளையாட்டு மையதானமானது ரூ.14 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் திறந்து வைத்தார்.

தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை மழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்திலும் அவ்வபோது மாலை நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினமும் மாலை நேரத்தில் சுமார் 30 நிமிடங்கள் கோடை மழை பெய்தது. 

நாகையில் திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுத வந்த மாணவியின் செயலால் ஆசிரியர்கள் நெகிழ்ச்சி

இந்த மழைக்கு தாக்குப்பிடிக்காமல் வஉசி மைதானத்தின் ஒரு கேலரி சேதமடைந்து கீழே விழுந்தது. இது குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் முதல்வரால் திறக்கப்பட்டு 8 மாதங்களிலேயே 30 நிமிட மழைக்கு தாக்குப்பிடிக்காத மைதான மேற்கூரை அமைக்கப்பட்டதில் ஊழல் நடந்துள்ளது. இதே போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இது குறித்து மத்திய அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் திடீரென மிரண்ட மாடு; ரேக்ளா வண்டி மோதி தூக்கி வீசப்பட்ட பெண் பலி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios