பிரபல தனியார் நிறுவன பிஸ்கட்டில் முடி; பால் வியாபாரிக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

புதுவையில் பிரபல தனியார் நிறுவன பிஸ்கட்டில் முடி கிடந்த விவகாரத்தில் நுகர்வோருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Court orders compensation of Rs 20,000 to consumers in case of hair found in biscuits of famous private company

புதுச்சேரி அடுத்த ஆண்டியார் பாளையத்தை சேர்ந்தவர் வடமலை. பால் வியாபாரியான இவர் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி கலிதீர்த்தால் குப்பத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் பிரபல தனியார் நிறுவனத்தின் பிஸ்கட் பாக்கெட்டை வாங்கியுள்ளார்.

அதனை வடமலை பிரித்து சாப்பிட்ட போது பிஸ்கட்டில் முடி இருந்தது. இது தெரியாமல் பிஸ்கட்டை சாப்பிட்ட அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உடல் நலகுறைவு  ஏற்பட்டு திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

இது தொடர்பாக பிஸ்கட் விற்ற மளிகை கடைக்காரர் மற்றும் ஏஜென்சியிலும் முறையிட்டதற்கு சரியான பதில் இல்லை. இதனை தொடர்ந்து வடமலை ரூபாய் 98 ஆயிரம் இழுப்பீடு கேட்டு மாவட்ட நுகர்வோர் குறைவு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஐந்தாம் தேதி ஆணைய தலைவர் முத்துவேல் தலைமையில் உறுப்பினர்கள் ஆறுமுகம், சுவித்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம் - உரிமையாளர் அதிரடி

வழக்கு விசாரணையில் பிஸ்கட்டில் முடி கிடந்ததால் உடல் நலம் பாதித்து மன உளைச்சலால் பாதித்த வடமலைக்கு பெங்களூருவைச் சேர்ந்த தனியார் பிஸ்கட் நிறுவனம் இழப்பீடாக 15 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவிற்கு ரூபாய் ஐந்தாயிரம் என 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் மேலும் பிஸ்கட் வாங்கிய தொகை 20 ரூபாயும் சேர்த்து வழங்க உத்தரவிட்டார்.

சென்னையில் ஓடும் ரயிலில் தாலி செயின் பறித்துவிட்டு திருடன் தப்பி ஓட்டம்; சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

பிரபல தனியார் நிறுவன பிஸ்கட்டில் முடி கிடந்த வழக்கில் 20 ஆயிரம் ரூபாய் எழுப்பிடு தொகையை வாடிக்கையாளருக்கு நஷ்ட ஈடாக வழங்க குறை தீர்வு ஆணையம் உத்தரவிட்டு உள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios