தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் இன்று புதுச்சேரியில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்.
Bussy Anand Speech : புதுச்சேரி உப்பளத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. சட்டம் மற்றும் ஒழுங்கு மூத்த காவல் கண்காணிப்பாளர் ஆர். கலைவாணன் தலைமையிலான புதுச்சேரி காவல்துறை, யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என்ற நிபந்தனையுடன் எக்ஸ்போ மைதானத்தில் இந்த நிகழ்வுக்கு அனுமதி வழங்கி இருந்தது.
இன்று மதியம் 12:30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. வழக்கமாக மேடை அமைத்துப் பேசுவதற்குப் பதிலாக, பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சார வாகனத்தில் இருந்து விஜய் பேசினார். இந்தக் கூட்டத்தில், தவெக தலைவரும் நடிகருமான விஜய் பேசும் முன்னர் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முதலில் உரையாற்றினார்.
புஸ்ஸி ஆனந்த் பேசியது என்ன?
புஸ்ஸி ஆனந்த் ஏற்கனவே புதுச்சேரியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார். இதனால் புதுச்சேரி மக்களுக்கு மிகவும் பரிட்சயமான முகமாகவே ஆனந்த் பார்க்கப்படுகிறார். விஜய்க்கு அடுத்தபடியாக புஸ்ஸி ஆனந்த் ஸ்பீச் தான் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில், அவர் தவெக பொதுக்கூட்டத்தில் என்ன பேசினார் என்பதை இங்கே காணலாம்.
தன்னுடைய உரைய தொடங்கியது, வந்திருக்கும் மக்களுக்கும் தவெகவினருக்கும் நன்றி தெரிவித்த அவர், 2026-ம் ஆண்டு தமிழகத்தில் மட்டுமல்ல புதுச்சேரியிலும் தவெக ஆட்சி அமையும் என உறுதிபட கூறினார். தமிழ்நாட்டில் நம்மை எங்குமே விடாக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். காற்றை மறைக்க முடியுமா என்ன.. எதுவுமே செய்ய முடியாது. தலைவரை யாராலும் ஒன்னும் செய்ய முடியாது. தமிழக முதலமைச்சராக 2026-ல் தளபதி வருவார். இன்னும் நான்கு மாதங்கள் தான் இருக்கிறது. நம்பிக்கையோடு உழைத்தால் புதுச்சேரியிலும் நம்முடைய ஆட்சி இருக்கும் என புஸ்ஸி ஆனந்த் கூறினார்.


