- Home
- Politics
- இந்த திமுகவை நம்பாதீங்க..! மக்களை நம்ப வைச்சு ஏமாற்றுவதுதான் அவங்க வேலையே..! விஜய் எச்சரிக்கை..!
இந்த திமுகவை நம்பாதீங்க..! மக்களை நம்ப வைச்சு ஏமாற்றுவதுதான் அவங்க வேலையே..! விஜய் எச்சரிக்கை..!
இந்த திமுகவை நம்பாதீங்க. உங்கள நம்ப வச்சு ஏமாத்துறது தான் அவங்க வேலையே. நான் சொன்ன பல கோரிக்கைகளை எல்லாம் தீர்த்து வைப்பதற்கு நம்ம புதுச்சேரி கவர்மெண்ட்க்கும் அதோட மக்கள் திட்டங்களுக்கும் ரொம்ப அக்கறையா துணை நிற்கிறோம்.

கரூர் சம்பவம் நடந்த 73 நாட்களுக்கு பின் விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பை நடத்தினார். காலை முதலே புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் தவெக தொண்டர்களும், பொதுமக்களும் குவிந்தனர். அப்போது மாநாட்டில் பேசிய அவர், ‘‘என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மக்களே, உங்கள் அனைவருக்கும் . எல்லாரும் எப்படி இருக்கீங்க? தமிழ்நாடு ஒரு தனி மாநிலம். புதுச்சேரி ஒரு தனி யூனியன் பிரதேசம். அவங்களுக்கு தான் தமிழ்நாடு, தனி புதுச்சேரி தனி. இப்படிலாம் இருப்பாங்க. ஆனால் நமக்கு அப்படி கிடையாது. தமிழ்நாடும், புதுச்சேரியும் தனித்தனியாக இருந்தாலும் நாம் எல்லாரும் ஒன்றுதான். நாம் எல்லாரும் சொந்தம்தான். வேற வேற வீட்ல, வேற வேற ஊர்ல, வேற ஸ்டேட்டில் இருக்கிறதுனால நாம் எல்லாரும் சொந்தங்கள் இல்லை என்று சொல்ல முடியுமா? அது எப்படி முடியும்?
அதனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா வேறு வேறாக இருந்தாலும் நம் சொந்தங்கள்தான். அரவிந்தர் ஆசிரமம், வில்லியனூர் மாதவன், மகாகவி பாரதியார் அவர்கள் இருந்த மண். பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் பிறந்த மண்.ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி சொல்லியே ஆகணும் 1977 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி அமைச்சாங்க. ஆனா அதுக்கு முன்னாடியே 1974 இங்க புதுச்சேரியில் அவர்களுடைய ஆட்சி அமைஞ்சது. அதனால தான் அப்பவே சொன்னாங்க, நமக்காக வந்தவர் எம்ஜிஆர். அவரை தமிழ்நாட்டில் மிஸ் பண்ணிடாதீங்க என நமக்கு அலர்ட் பண்ணதே புதுச்சேரி தான்.
அப்படிப்பட்ட புதுச்சேரியை நம்மளால மறக்க முடியுமா? அது மட்டும் இல்ல, இங்க இருக்கிற மக்கள், புதுச்சேரி மக்களும் எனக்கு கிட்டத்தட்ட ஒரு முப்பது வருஷமா என்னைத் தாங்கி பிடிச்சிக்கிட்டு இருக்கீங்க. அதனால இந்த விஜய் தமிழ்நாட்டுக்கு மட்டும் தான் குரல் கொடுப்பான் என்று நினைக்காதீங்க. அப்படி பண்ணா தவறு. புதுச்சேரி மக்களுக்கும் சேர்த்து தான் குரல் கொடுப்பான். அது என்னுடைய கடமையும் கூட. அது மட்டும் இல்ல இந்த புதுச்சேரி கவர்மெண்ட் பத்தி நாம சொல்லியே ஆகணும். வேற ஒரு அரசியல் கட்சி நடத்துற நிகழ்ச்சியாகவே இருந்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு தன்னெழுச்சியோடு அவர்கள் நம்ம மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து பாரபட்சமே காட்டாம இந்த கவர்மெண்ட் நடந்து கொடுள்ளது.
நம்ம புதுச்சேரி சிஎம் சார் அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். புதுச்சேரியை ஒன்றிய அரசு எதிலுமே கண்டுக்கவில்லை என்பது புதுச்சேரி மக்களான உங்களுக்கு நல்லாவே தெரியும். மாநில அந்தஸ்து கோரிக்கையை மட்டுமா கண்டுக்கல? இங்க வளர்ச்சி ஏற்படவும் துணை நிற்கவே இல்லை என கேள்விப்படுகிறோம். இந்த புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்து கொடுக்கல. மாநில அந்தஸ்து வேணும்னு கேட்டு பலமுறை சட்டசபையில் தீர்மானம் போட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்துக்கொண்டே இருக்கிறாங்க. இந்த வருஷம் கூட மார்ச் மாசம் 27ஆம் தேதி 2025 அன்னைக்கு ஒரு தீர்மானம் போட்டாங்க.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மூடப்பட்ட ஐந்து மீன்கள் பல்வேறு தொழிற்சாலைகள் மீண்டும் கிடைக்கிறது எண்ணமே இல்ல. இங்க ஒரு அமைச்சர ஊழல் குற்றச்சாட்டுல பதவியை விட்டு நீக்கப்பட்டு அந்த இடத்துக்கு இன்னொருத்தர் நியமித்து இன்ற்ரோடு இருநூறு நாள் ஆகிவிட்டது. இன்னும் அவருக்கு ஒரு இலாக்காவை தரல. இந்த செயல் சிறுபான்மை மக்களை அவமானப்படுத்துவது என இந்த மக்கள் சொல்றாங்க. புதுச்சேரியோட முக்கிய அங்கமாக இருக்கிற காரைக்கால் எல்லாம் முன்னேற்றமே இல்லாத பகுதினு மக்கள் சொல்லிகிட்டே இருக்காங்க. புதுச்சேரியில் போதுமான அளவு பார்க்கிங் வசதி இல்லை. போதுமான அளவு கழிப்பறை வசதியில்லை. புதுச்சேரி, கடலூர் மார்க்கமான ரயில் திட்டம் வேணும்ங்கிறது நீண்ட கால கோரிக்கை. இந்த திமுகவை நம்பாதீங்க. உங்கள நம்ப வச்சு ஏமாத்துறது தான் அவங்க வேலையே. நான் சொன்ன பல கோரிக்கைகளை எல்லாம் தீர்த்து வைப்பதற்கு நம்ம புதுச்சேரி கவர்மெண்ட்க்கும் அதோட மக்கள் திட்டங்களுக்கும் ரொம்ப அக்கறையா துணை நிற்கிறோம்.
தமிழ்நாட்டை ஒதுக்குற மாதிரி, புதுச்சேரி ஒதுக்க கூடாது. யூனியன் பிரதேசமான புதுச்சேரி மத்திய நிதி குழுவில் இடம் பெறவில்லை. அதனால் மற்றவர்களுக்கான நிதி பகிர்தல் அடிப்படையிலும் யூனியன் பிரதேசங்களுக்கான நிதி பகிர்தல் அடிப்படையிலும் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. அந்த நிதியும் அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதிய தொகை உள்ளிட்ட திட்டச் செலவுகளுக்கே சென்று விடுவதால் மீத தேவைக்கு வெளிச்சந்தையிலும் கடன் பத்திரங்களை கடன் வாங்குகிறது புதுச்சேரி. இந்த நிலைமை மாறனும்னா ஒரே வழி மாநில அந்தஸ்து நம்ம புதுச்சேரி மக்களுடைய பல்லாண்டு கால கோரிக்கை. புதுச்சேரிக்கு போதுமான நிதி வரத்து இல்லாததுனால வெளியே கடன் வாங்க வேண்டியதாயிருக்கு. புதுச்சேரியோடு கடனை குறைத்து தற்சார்பு பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
தொழில் வளர்ச்சியும் தேவையற்ற புதுச்சேரி தென்னிந்தியாவின் முன்னாடி இண்டஸ்ட்ரியல் ஆக மாற்ற எல்லாம் முயற்சிகளும் எடுக்க வேண்டும். இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரி தான். ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதாரமே ரேஷன் கடைகள் தான். மற்ற மாநிலங்களில் இருக்கிற மாதிரி இங்கேயும் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை எண்ணெய் என அனைத்து பொருட்களும் வழங்கும் முறை சீராக்கப்பட வேண்டும். காரைக்கால் மீனவர்களை அடிக்கடி கைது செய்யும் இலங்கை கடற்படை அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து விடுகிறது. அதனால் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் படகுகள் கிடைக்காததால் ஒரு மோசமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். வரப்போற புதுச்சேரி தேர்தல் களத்தில் நம்மளுடைய தமிழக வெற்றி கழகத்தின் கொடி பட்டொளி வீசி பறக்கும். நல்லதே நடக்கும்’’ என அவர் தெரிவித்தார்.
