- Home
- Politics
- ஸ்டாலின் சார்... தில் இருந்தா எல்லாத்தையும் தூக்கிப்போட்டுவிட்டு எங்களோடு தேர்தலில் மோதிப்பாருங்கள்..! ஆதவ் சவால்..!
ஸ்டாலின் சார்... தில் இருந்தா எல்லாத்தையும் தூக்கிப்போட்டுவிட்டு எங்களோடு தேர்தலில் மோதிப்பாருங்கள்..! ஆதவ் சவால்..!
தமிழக வெற்றிக்கான பிரச்சார பயணம் இன்றிலிருந்து தொடங்கிவிட்டது. நீங்க தமிழ்நாட்டுல முதலமைச்சர். ஒரு நல்ல ஆட்சி, ஒரு நல்ல கல்வி, ஒரு நல்ல போக்குவரத்து வசதி, ஒரு நல்ல மருத்துவம். இதுக்காக இன்னும் ஏங்கிட்டு இருக்காங்க.

தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கப்பட்ட பின்னர் அக்கட்சியின் தலைவர் விஜய் முதல் முறையாக இன்று புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துகிறார்.
அப்போது பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, ‘‘ எப்படி இருக்கீங்க? 72 நாள் கழிச்சு அண்ணே புதுச்சேரியில் இறங்கி இருக்காரு. அது எதுக்கானு நம்ம தெரிஞ்சுக்கணும்.கிட்டத்தட்ட கரூர் சம்பவத்துக்கு அப்புறம் இங்கே வந்்திருக்கிறார். முக்கியமான சொல்றேன் இங்க இருக்க காவல்துறைக்கு ஒரு மிகுந்த கரவொலியோடு நம்ம நன்றி சொல்லணும். இதை பார்த்து சிஎம் சார் தமிழ்நாட்டுல தான் காவல்துறையில் சட்டம் -ஒழுங்கு சரின்னு சொல்றீங்களே... கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க. ஒரு சின்ன மாநிலம் புதுச்சேரின்னு சொல்றீங்களே. இந்தியாவுக்கு இந்த காவல்துறை ஒரு முன்னுதாரணமாக இருந்து கொண்டு இருக்கு.
காவல்துறை மட்டுமல்ல, இங்க இருக்கக்கூடிய ஒட்டுமொத்த மக்களும், இங்க இருக்க முதலமைச்சர் அவர்களுக்கும் என்னுடைய நன்றியை நாங்கள் தெரிவிக்கிறோம். இப்படி ஒரு பாதுகாப்பையும், இப்படி ஒரு மக்கள் பாதுகாப்பையும் தமிழ்நாட்டுல இதுவரைக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் பயணத்தில் கொடுத்ததே கிடையாது. அதனால் சிஎம் சார் உங்க அரசியல் எல்லாத்தையும் தூக்கி போட்டு தைரியமா எங்க அண்ணன் சொல்ற மாதிரி, எங்க தலைவர் விஜய் சொல்ற மாதிரி காவல் துறையை வைத்துக்கொண்டு அரசை வைச்சுக்கிட்டு பிரச்சாரம் பண்றது, முடக்குறது இல்ல.
தமிழக வெற்றிக்கான பிரச்சார பயணம் இன்றிலிருந்து தொடங்கிவிட்டது. நீங்க தமிழ்நாட்டுல முதலமைச்சர். ஒரு நல்ல ஆட்சி, ஒரு நல்ல கல்வி, ஒரு நல்ல போக்குவரத்து வசதி, ஒரு நல்ல மருத்துவம். இதுக்காக இன்னும் ஏங்கிட்டு இருக்காங்க. அதெல்லாம் எப்படி? அன்றைக்கு வந்து எம்ஜிஆர் கட்சி ஸ்டார்ட் பண்ண பிறகு முதல் முறையாக அவர் தமிழகத்துக்கு மட்டும் யோசிக்கல. அதே மாதிரி எங்களுடைய தலைவர் விஜய் அவர்கள் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, புதுச்சேரிக்கும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய திட்டத்தை வைத்திருக்கிறார். உங்கள் முன்னாடி அவருடைய பேச்சுல அடுத்த ஐம்பது வருஷத்துக்கான புதுச்சேரியோடு வரலாற்றை புதுசா எழுதப்படும். தமிழக வெற்றி கழகத்தின் மூலமாக இது பதிவு பண்றோம்.
அதாவது ஃபர்ஸ்ட் ஒரு டோக்கன் போட்டு கூட்டத்தை ஆரம்பிக்கணும்னு மக்களிடம் சொன்னாங்க. ஆனால் கிட்டத்தட்ட இங்க ஒரு 100 ஏக்கர் 200 ஏக்கர் அளவில் திரண்டு தமிழக வெற்றி கழகத்தினுடைய மாநாடு மிகப்பெரிய அளவில் நம் நிலத்தை எடுத்து, ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களும் கூடியிருக்கிறார்கள். இங்கே இருக்கிற மாதிரி அடுத்த கட்ட ஒரு பிரச்சாரத்தை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் உருவாக்குவார். இன்றைக்கு நம்முடைய அடிப்படை தேவை கூட நம்ம கஷ்டப்பட்டு தெரியும். இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை கூடிய விரைவில் வந்து நீங்க பார்ப்பீங்க. அதற்கான எழுச்சி பயணமாக இன்றிலிருந்து புதுச்சேரி இருக்கும். தமிழகம் மட்டுமல்ல புதுச்சேரி மக்களோடு தமிழக வெற்றிக்கழகம் ஒரு பயணத்தை தொடங்குகிறது’’ என அவர் தெரிவித்தார்.
