Asianet News TamilAsianet News Tamil

இந்திய மீனவர்கள் மீது இந்திய காவல்படையினரே தாக்குதல்.. கொந்தளிக்கும் மீனவர்கள் கூட்டமைப்பு !

இந்திய மீனவர்கள் மீது இந்திய காவல்படையினரே தாக்குதல் நடத்துவது என்பது மனித உரிமை மீறல் என்றும், இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கவுள்ளோம் என்றும், தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னத்தம்பி பேட்டி அளித்துள்ளார்.

Attack on Indian fishermen by Indian police forces The turbulent fishermen federation
Author
First Published Nov 4, 2022, 8:14 PM IST

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து  தங்கு கடல் மீன் பிடித்துகொண்டிருந்த மீனவர்கள் மீது கோடியாக்கரை ராமேஸ்வரம் இடையே வடக்கு கடல் பகுதியில்  கடந்த 21ஆம் தேதியன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில்  படகில் இருந்த மயிலாடுதுறை வானகிரி பகுதியை சேர்ந்த மீனவர் வீரவேல் (30) என்பவருக்கு இடது இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் 5  துப்பாக்கி குண்டு சிதறல்கள் பாய்ந்ததில்  படுகாயம் அடைந்தார். இதனையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மீனவர் வீரவேலை தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பினர்  இன்று மருத்துவமனையில் நேரில் சந்தித்து துப்பாக்கி சூடு குறித்து கேட்டறிந்தனர்.

Attack on Indian fishermen by Indian police forces The turbulent fishermen federation

இதையும் படிங்க..சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்.. மாற்று வழி இதுதான் ! தேவசம்போர்டு அறிவிப்பு

தொடர்ந்து மீனவர் வீர வேலுவின் மனைவியை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னத்தம்பி,கடந்த 21ஆம் தேதி இந்திய கப்பற்படையினர் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி மீனவர்களை கையை கட்டி சித்ரவதை செய்து மனித மீறலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களின் படகை நோக்கி 45முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் கரை அருகே வந்து இந்திய மீனவர்களை துப்பாக்கி சூடு நடத்திசெல்லும் அளவிற்கு நிலைமை உள்ளது. இந்திய கப்பற்படை இந்திய மீனவர்களை அச்சப்பட வைக்க வேண்டும் என்பதற்காகவே துப்பாக்கி சூடு நடத்தியது போல தெரிகிறது.

இதையும் படிங்க..யார் இந்த இசுதான் கத்வி.? பத்திரிகையாளர் டூ ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்.. குஜராத் தேர்தல் பரபர!

இந்திய கடற்படையின் மனித உரிமை மீறல் குறித்து நடவடிக்கை எடுக்க டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தில் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் புகார் அளிக்கவுள்ளோம் எனவும் , இந்திய மீனவர்கள் மீது இந்திய காவல்படையினரே தாக்குதல் நடத்துவது என்பது மனித உரிமை மீறல் என தெரிவித்தனர். மேலும் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

இதையும் படிங்க..தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி.. ஆனால் அந்த 6 இடங்களில் அனுமதி இல்லை!

Follow Us:
Download App:
  • android
  • ios