வசதியான குடும்பங்கள் கவுரவ குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளலாம்... அறிவித்தது புதுச்சேரி அரசு!!

அரசின் இலவசங்கள் தேவைப்படாத வசதி வாய்ந்த குடும்பங்கள் கவுரவ குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளலாம் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. 

affluent families can get honor family card announced by puducherry govt

அரசின் இலவசங்கள் தேவைப்படாத வசதி வாய்ந்த குடும்பங்கள் கவுரவ குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளலாம் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இதுக்குறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குடிமைப்பொருள் வழங்கல் துறையால், கவுரவ குடும்ப அட்டைகள் வழங்கப்பட உள்ளது. புதுச்சேரியில் தற்போது அனைத்து வகை: சிவப்பு/மஞ்சள் நிறம்) குடும்ப அட்டை பெற்றுள்ளவர்களும் கவுரவ குடும்ப அட்டை பெற தகுதி வாய்ந்தவர்கள்.

இதையும் படிங்க: நேற்று பிறந்தநாள்.. கனிமொழியுடன் கடைசி போட்டோ.! ஸ்டாலின் ஜேக்கப் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

அரசின் இலவசங்கள் தேவைப்படாத வசதி வாய்ந்த குடும்பங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும்படி வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். கவுரவ குடும்ப அட்டை பெற்றவர்கள், புதுவையின் சிறப்பு பிரஜைகளாக கருதப்பட்டு குடிமைப்பொருள் வழங்கல் துறையால் வழங்கப்படும் அரசின் இலவசங்கள் எதுவும் வழங்கப்படாது.

இதையும் படிங்க: காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு: 4 மாத குழந்தையை தகப்பனே கொலை செய்த கொடூரம்

புதிய கவுரவ குடும்ப அட்டை வேண்டுபவர்கள் குடும்ப தலைவர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் அசல் குடும்ப அட்டையையும் குடிமைப்பொருள் வழங்கல் நுறை அலுவலகத்தில் ஒப்படைத்து கவுரவ குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளலாம். உதவிக்கு 9442194480 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு அல்லது அதே எண்ணில் Whatsapp/ குறுஞ்செய்தி மூலமாக தகவல் பெறலாம். மின்னஞ்சல் முகவரி: dcscu@py.gov.in -ஐ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios