புதுவை மத்திய சிறை கல்வி சாலையாக காட்சி அளிக்கிறது - நடிகர் பார்த்திபன் பாராட்டு
புதுச்சேரி மத்திய சிறைக்கு வருகை புரிந்த நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் சிறைவாசிகளின் இயற்கை விவசாயத்தை கண்டு ரசித்தார். மேலும் சிறையில் உள்ள நூலகத்திற்கு புத்தகங்கள் மற்றும் சிறைவாசிகளுக்கு விளையாட்டு சாதனங்களையும் இலவசமாக வழங்கினார்.
புதுச்சேரி மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டணை கைதிகள் என 300-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள சிறைவாசிகளின் மன அழுத்தத்தை போக்க அவர்களுக்கு இசை, நடனம், யோகா, உள்ளிட்டவைகளையும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் சிறை வளாகத்தில் உள்ள சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் சிறைவாசிகள் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி மத்திய சிறைக்கு வருகை புரிந்த நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் மத்திய சிறையில் சிறைவாசிகளால் உருவாக்கப்பட்ட இயற்கை விவசாயத்தை ஆர்வமுடன் பார்வையிட்டார். சிறைவாசிகளால் நடத்தப்படும் பேக்கரி யூனிட், காலணி மற்றும் மிதியடி தயாரித்தல்,ஜெயில் ரேடியோ, ஆகியவைகளை பார்வையிட்டார். தொடர்ந்து சிறைவாசிகளால் வளர்க்கப்படும் ஆடு, மாடு, மற்றும் முயல், கோழிகள் வளர்ப்பு மற்றும் இயற்கை விவசாயத்தின் மூலம் வளர்க்கப்படும் திராட்சை, டிராகன் பழம், காபி, மிளகு, ஏலக்காய், கிராம்பு மற்றும் அரிய வகை மூலிகை செடிகளையும் நடிகர் பார்த்திபன் ஆர்வமுடன் பார்வையிட்டு ரசித்தார்.
கட்டிட தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொடூர கொலை; திருச்சியில் போதை ஆசாமிகள் வெறிச்செயல்
மேலும் சிறைவாசிகளுடன் இயற்கை விவசாயங்கள் குறித்து கேட்டிறிந்தார் தொடர்ந்து சிறைவாசிகள் மத்தியில் அவர் பேசும்போது, புதுச்சேரி சிறைச்சாலை கல்வி சாலையாக திகழ்கிறது. தவறு செய்த ஒரு மனிதன் திருந்துவதற்கு ஒரு சரியான வாய்ப்பாக புதுச்சேரி சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலை ஒரு தவ சாலையாக உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் ஜெயில் எப்.எம் என்ற பெயரை ஹூமன் எப்.எம் என பெயரை மாற்றினால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்த அவர் தன்னால் முடிந்த உதவிகளையும் சிறைவாசிகளுக்கு செய்வதாகவும் உறுதியளித்தார். மேலும் சிறையில் உள்ள நூலகத்திற்கு புத்தகங்கள், விளையாட்டு உபகரங்களையும் வழங்கினார். இதற்கு முன்னதாக சிறைத்துறை ஐ.ஜி ரவி தீப் சிங் சாகர் மற்றும் தலைமை கண்காணிப்பாளர் அழகேசன் சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.