கட்டிட தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொடூர கொலை; திருச்சியில் போதை ஆசாமிகள் வெறிச்செயல்

திருச்சியில் கட்டிட தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

construction worker killed by suspicious persons in trichy vel

திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் குணசேகர்(வயது 55). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு ராணி என்ற மனைவி,  விஜயகுமார், தர்மா என்ற இரு மகனும், ரேவதி என்ற மகளும் உள்ளனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனியாக வசித்து வந்தனர். 

குணசேகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் அதிக அளவில் மது குடித்துவிட்டு அடிக்கடி சாலை ஒரத்தில் உறங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு குணசேகர் உறையூர் அடுத்துள்ள ராமலிங்க நகர் பகுதியில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். 

பணம் தரமறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கள்ளக்காதலன்; திருப்பத்தூரில் பரபரப்பு

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு கைகலப்பாக மாறியதைத் தொடர்ந்து உடன் மது குடித்தவர்கள் குணசேகரனை அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் சரமாரியாக அடித்து உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த குணசேகர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.  

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த உறையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குணசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios