“படித்த படிப்புக்கு வேலை இல்லை” சட்டசபையில் சான்றிதழ்களை வீசி எறிந்த பட்டதாரி இளைஞர்

புதுச்சேரியில் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி இளைஞர் ஒருவர் தனது கல்வி சான்றிதழ்களை சட்டசபை வளாகத்தில் தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

a young man thrown his education certificates into assembly building in puducherry for unemployment

புதுச்சேரியில் இன்று காலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரி சட்டசபைக்கு வந்தார். வந்த வாலிபர் இரு சக்கர வாகனத்தை நுழைவாயில் அருகில் நிறுத்திவிட்டு திடீரென்று தன் கையில் வைத்திருந்த மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை அடங்கிய கோப்புகளை சட்டசபையில் தூக்கி வீசினார்.

இதில் கோப்பில் வைக்கப்பட்டிருந்த மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் சட்டசபை வளாகத்தில் சிதறின. இதனால் அதிர்ச்சி அடைந்த சட்டசபை காவலர்கள் அவரை பிடித்து எதற்காக சட்டசபையில் சான்றிதழ்களை வீசி எறிந்தாய் எனக்கேட்டனர். அதற்கு ஆவேசமாக பதில் அளித்த வாலிபர், இங்கே என்ன அரசாங்கம் நடக்கிறது? படித்தவர்களுக்கு கூட வேலை கொடுக்க முடியவில்லை என்றால் எதற்காக அரசு நடக்க வேண்டும் என சபை காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

புதுவையில் முதல்வரின் பிறந்தநாள் அலங்கார வளைவு விழுந்து விபத்து; 3 பேர் படுகாயம்

மேலும் வீசப்பட்ட சான்றிதழ்களை எடுத்துச் செல்லும்படி சபை காவலர்கள் எவ்வளவோ கூறியும், அதை ஏற்க மறுத்து தொடர்ந்து அவர் நுழைவாயில் முன்பு நின்று கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனை அடுத்து பெரிய கடை காவல் துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சட்டசபை காவலர்களுடன் அத்துமீறி ரகளையில் ஈடுபட்ட வாலிபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். 

சிறுவர்களுக்கு இனிப்புகளை வழங்கிவிட்டு புன்னகையுடன் நகர்ந்து சென்ற குடியரசு தலைவர்

புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்கள் பெருந்திரளானோர் பணி வழங்கக் கோரி மாபெரும் பேரணி நடத்திய நிலையில், சட்டசபை வளாகத்தில் இன்று நடைபெற்ற இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios