Asianet News TamilAsianet News Tamil

கிணற்றில் தவறி விழுந்து 3 நாட்களாக உயிருக்கு போராடிய முதியவர் மீட்பு

புதுச்சேரியில் உறவினர் வீட்டிற்குச் சென்ற முதியவர் தவறுதலாக 120 அடி ஆழ கிணற்றில் விழுந்த நிலையில், 3 நாட்களுக்குப் பின்னர் தீயணைப்பு துறையினர் அவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

70 year old man rescued from 120 feet well after 3 days in puducherry
Author
First Published May 13, 2023, 10:32 AM IST

கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாவாடை(வயது 70). புதுச்சேரியின் மடுகரை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த போது வழி தவறி அங்குள்ள  120 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்து விட்டார். அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் பாவாடையின் குரல் யாருக்கும் கேட்கவில்லை. 3 நாட்களாய் அவர் கத்தி கத்தி மயங்கியுள்ளார்.

70 year old man rescued from 120 feet well after 3 days in puducherry

இன்று லேசாக மயக்கம் தெளிய மீண்டும் தன்னை காப்பாற்றும் படி கத்தியுள்ளார். அப்போது அவ்வழியே சென்ற ஊர்காரர் ஒருவர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க மடுகரை தீயணைப்பு வீரர்களும் கிராம மக்களும் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாவாடையை மீட்டனர்.

இளம் பெண்ணை வெளிநாட்டிற்கு கடத்த சதி? ஈரோட்டில் பெற்றோர் கதறல்

நெற்றியில் காயத்துடன் மடுகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற அவர் கடலூர் பட்டாம்பாக்கத்திற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார். மூன்று நாட்களாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதியவர்  பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் சுற்று வட்டார கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios