இளம் பெண்ணை வெளிநாட்டிற்கு கடத்த சதி? ஈரோட்டில் பெற்றோர் கதறல்
என் மகளை காதல் என்ற பெயரில் கடத்தி சென்றவர் மீது திருட்டு, ஏ.டி.எம். கொள்ளை மற்றும் ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவரிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என கண்ணீர் மல்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பெற்றோர் புகார் அளித்ததால் பரபரப்பு.
ஈரோடு மாவட்டம் குமாரசாமி வீதியைச் சேர்ந்த செல்வராஜ் மகள் சந்தியா(வயது 19). ஈரோடு சி.என். கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சூரம்பட்டி பாரதிபுரத்தை சேர்ந்த அலாவுதீனுடன் பேசி பழகி வந்துள்ளார். இதை அறிந்த செல்வராஜ் தன் மகளை மூன்று மாதங்களுக்கு முன் கண்டித்துள்ளார்.
கடந்த 9ம் தேதி மாலையில் வீட்டின் அருகே உள்ள ரேஷன் கடை முன் சந்தியாவும், அலாவுதீனும் பேசி கொண்டிருந்தனர். இதனை செல்வராஜ் மனைவி பூங்கொடி பார்த்து இருவரையும் கண்டித்த பூங்கொடி தன் மகளை வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு சென்று பார்த்த போது சந்தியா மாயமானது தெரியவந்தது.
ஓசூரில் பழிக்கு பழியாக தீர்த்துக்கட்டப்பட்ட வாலிபர்; டீ கடையில் நடந்த பரபரப்பு சம்பவம்
மேலும் வீட்டு பீரோவில் இருந்த தனது பள்ளி சான்றிதழ்களையும் எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பூங்கொடி, ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
9 கோடி ரூபாய் நட்டத்தில் இருந்த கைதறி துறை 20 கோடி ரூபாய் லாபத்தில் இயங்குகிறது - அமைச்சர் பெருமிதம்
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகனிடம் அளித்த பரபரப்பு புகாரில், என் மகள் சந்தியாவை காதல் என்ற பெயரில் கடத்தி சென்ற அலாவுதீன் மீது திருட்டு, ஏ.டி.எம். கொள்ளை மற்றும் ஆள் கடத்தல் வழக்குகளில் பலமுறை கைதாகி சிறை சென்று வந்துள்ளார். என் மகளை வெளிநாடுக்கு கடத்தி விற்பனை செய்து விடுவார் அல்லது கொலை செய்து விடுவார் என பயப்படுகிறோம். என் மகளை அலாவுதீன் கொலை செய்வதற்கு முன்பாக கண்டுபிடித்து தர வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.