30 மாதம் சம்பள பாக்கி; போராட்டத்தின் போது பூச்சி மருந்தை குடித்த அரசு ஊழியர்கள்
புதுச்சேரியில் சம்பள பாக்கியை வழங்கக்கோரி நடத்தப்பட்ட அரசு ஊழியர்கள் போராட்டத்தில் திடீரென 7 பேர் பூச்சி மருந்து குடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் அரசு கூட்டுறவு நிறுவனமான அமுத சுரபியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 30 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்களில் ஊழியர்கள் ஈடுப்பட்டு வந்தனர். அரசு அவர்களுக்கு 3 மாத சம்பளத்தை வழங்குவதாக உறுதி அளித்தது. அந்த சம்பளம் 15ம் தேதிக்குள் வரும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் இன்று வரை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் அரசு அறிவித்த சம்பளம், தங்களுக்கு உடனடியாக வழங்க வலியுறுத்தி அமுதசுரபி அலுவலகத்தில் படிக்கட்டுகளில் அமர்ந்து ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தொடர்ந்து புதுச்சேரி அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.
கிருஷ்ணகிரியில் கோர விபத்து; பேருந்து மீது மோதி 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் யாரும் எதிர்பாராத விதமாக தான் மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்தை 7-ஊழியர்கள் குடித்தனர். இதனால் போராட்ட களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்களை காவல் துறையினர் மற்றும் அங்கிருந்த ஊழியர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ராணிபேட்டையில் பயங்கரம்; தாய், 2 குழந்தைகள் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு
அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அரசு கூட்டுறவு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பளம் தராததால் விரக்தி அடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.