புதுவையில் சோகம்; தாய் கண்முன்னே அலையில் சிக்கி 3 மகன்கள் பலி

புதுவையில் கடலில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

3 persons in a single family drowned sea water and died in puducherry

புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த காட்டுக்குப்பம் பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(வயது 46). இவரது மனைவி சாந்தி (எ) சசி (40). இவர் வார்க்கால் ஓடையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு புஷ்பராஜன், கிஷோர்ராஜன் என்று 2 மகன்கள் இருந்துள்ளனர். அதே போன்று சுந்தரராஜின் சகோரரான ராவுக்கு ஷோபன்ராஜ் என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில்  சாந்தி மற்றும் அவரது மகன்கள் புஷ்பராஜ், கிஷோர்குமார் மற்றும் சுந்தர்ராஜ் அண்ணன் மகன் ஷோபன்ராஜ் ஆகியோர் பிள்ளையார்குப்பம் வள்ளுவர்மேடு பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றனர். அங்கு அனைவரும் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் புஷ்பராஜ், கிஷோர்ராஜன் மற்றும் ஷோபன்ராஜ் ஆகிய மூவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். 

இதனை கண்ட சாந்தி கூச்சலிடவே, கரையில் இருந்தவர்கள் கடலில் இறங்கி தத்தளித்துக் கொண்டிருந்த சோபன்ராஜ், கிஷோர்ராஜன் இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். புஷ்பராஜ் மாயமானார். உடனடியாக மீட்கப்பட்ட இருவரும் அருகிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர். 

கிருஷ்ணகிரியில் ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்த்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை, ஒருவர் உடல் மாயம் 

இது குறித்து கிருமாம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் துறையினர் கடலில் மாயமான புஷ்பராஜை உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர். சிலமணி நேர தேடலுக்குப் பிறகு அவரும் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து 3 பேரின் உடல்களையும் கைபற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

நெகிழி இல்லா கடற்கரை; 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற மாரத்தான்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios